அரசாங்கம் சேனாக்காக்களை உருவாக்கி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பல அமைப்புக்கள் சேனாக்காக்களை உருவாக்கி கோயில்கள், பள்ளிவாசல்கள், பூசகர்கள், மத குருமார்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு விரோதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது என ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
நெடுஞ்சாலைகளைப் புனரமைப்பதன் மூலம் தமிழர்களது வாழ்க்கை மேம்பட்டுவிடுமா? இது தான் அபிவிருத்தியா என தம்பர அமில தேரர் கேள்வியினையும் எழுப்பியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவிகளை மேற்கொண்டிருந்தன. அதற்கமைய அமெரிக்கா தொழில் நுட்பத்தை வழங்கியதுடன் இந்தியா ரேடார் தொகுதிகளையும் வழங்கியது. இதனால் தான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
ஆயினும் 1987இல் யாழ்ப்பாணம் வடமராட்சியில் நடைபெற்ற மோதலின் போது இந்தியா மோதலை நிறுத்துமாறு கோரியது. ஆனால் இறுதிக் கட்டத்தின் போது கோரவில்லை.
எனினும் அனைவரும் உலகம் இலங்கைக்குள் இருக்கின்றது என்ற ரீதியில் செயற்படாமல் இலங்கை உலகத்திற்குள் இருக்கின்றது என்ற யதார்த்தத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பல அமைப்புக்கள் சேனாக்காக்களை உருவாக்கி கோயில்கள், பள்ளிவாசல்கள், பூசகர்கள், மத குருமார்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு விரோதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் விடுதலைப்புலிகள் இருந்த காலங்களில் கூட இடம்பெற்றிருக்கவில்லை. அதேவேளை, அரந்தலாவ பிக்குகள் கொலையுடன் தொடர்புபட்ட சூத்திரதாரிகளும் இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த கே.பி. யும் இன்று அரசுடனேயே இருக்கிறார் என்றும் தம்பர அமில தேரர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேரர் அவர்களே, உங்களது திறமை, நேர்மை, துணிவை பாராட்டுகிறேன். நீங்கள் தான் உண்மையான நாட்டுப் பற்றாளர் ( தேசப் பிரேமி).
ReplyDeleteமக்களே....!!! அரசியல் வாதிகளே...!!! இப்படியான நல்லவர்களின் கரத்தை பலப்படுத்துவதோடு, ஊக்கமும் ஆதரவும் அளியுங்கள்.
@ kuruvi
ReplyDeleteஆமாம் சரியாகச் சொன்னீர்கள் உங்கள் தமிழ்த் தலைமைகள் போலல்ல இவர். அவர்கள் நேசக்கரம் நீட்டுவது போலக் காட்டிவிட்டு , உள்ளால் செய்வது எல்லாம் காடைத்தனம், அடாவடி.