ரபீக் எழுதிய 'நட்சத்திரக் கனவுகள்' கவிதை நூல் வெளியீடு (படங்கள்)
(எஸ்.அன்சப் இலாஹி)
சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், பிறை எப்.எம். சந்தைப்படுத்தல் முகாமையாளரும், கவிஞருமான எஸ்.ரபீக் எழுதிய 'நட்சத்திரக் கனவுகள்' கவிதை நூல் வெளியீட்டு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதி உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட், பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூமுக்கு பிரதி வழங்குவதனையும், நூலாசிரியர் எஸ்.ரபீக்கிற்கு பொன்னாடை போர்த்துவதனையும், அருகில் அக்கரைப்பற்று பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், இலக்கிய அதிதி தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினர்களையும் படங்களில் காணலாம்.


Post a Comment