ஒலுவில் ஸஹ்வா இஸ்லாமிய மகளீர் அறபுக் கல்லூரியில் மீண்டும் நேர்முகப்பரீட்சை
இவ்வாண்டுக்கான (2013 ஃ 2014)புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(28.04.2013)நடைபெற்றது. தூரப்பிரதேச மாணவிகள் பலர் வருகை தரமுடியாத காரணத்தினால் அவர்கள் நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ள முடியவில்லை என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு தவறிய மாணவிகளினது வேண்டுகோளின் பிரகாரம் பெண்கள் அறபுக் கல்லூரியின் நிருவாகத்த்தினர் நேர்முகப்பரீட்சைக்கு உரிய வேளைக்கு வருகைதராத மாணவிகளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். எதிர்வரும் சனிக்கிழமை(04.05.2013) அன்று காலை 9.00மணிக்கு கல்லூரியில் நேர்முகப்பரீட்சை நடைபெறும். விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ளாத மாணவிகள் உரிய நேரத்திற்கு வருகை தந்து தங்களது வருகையை உறுதிப்படுத்துமாறு நிருவாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்படிக்கு,
நிருவாகத்தினர்
ஸஹ்வா மகளீர்; அறபுக் கல்லூரி, ஒலுவில்.
Post a Comment