பிரான்சில் கல்வித்தரத்தில் உயர்ந்துநிற்கும் முஸ்லிம் பாடசாலை
பிரான்சில் வடபகுதியில் அமைந்துள்ள லில்லி என்ற ஊரில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட லைசி அவெரோயீஸ் என்ற முஸ்லீம் பள்ளி கல்வித் தரத்தில் உயர்ந்த இடத்தில் இருகின்றது.
தேசிய அளவில், அவெரோயீஸ் முஸ்லீம் பள்ளி முதல் மூன்று இடத்திற்குள் வந்து விட்டது. இந்தப் பள்ளி கடந்த 2003ம் ஆண்டில் தொடங்கப்பட்டபொழுது 11 மாணவர்களும், 19 ஆசிரியர்களும் இருந்தனர்.
ஆனால் தற்பொழுது 330 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் முஸ்லீம் அல்லாத மாணவர்களும் இருக்கின்றனர். மேலும் அறுநூறு மாணவர்களுக்கு தேவையான வசதியான புதிய பள்ளிக்கட்டிடம் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பதினால் ஆசிரியர்களால் இவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி வழி நடத்த முடிகிறது என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு மாணவர்கள் பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். 15 சதவிகிதம் பேர் மட்டுமே தனியார் பள்ளியை நாடிச் செல்கின்றனர்.
மேலும் கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகள் நல்ல தரத்துடன் இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

பிரதான செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் பிரசுரம் செய்யும் ஜப்னா முஸ்லிமின் ஆக்கபூர்வமான சேவையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
ReplyDeleteஎனது கருத்து: ஹிஜாப் அணிந்திருந்தாலும், கவர்ச்சியாகக் காணப்படும் பெண்களின் போட்டோக்களை பிரசுரங்களில் தவிர்த்தல் நல்லது.