இலங்கை தேசம் தனிச் ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல - றிசாத்
(வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை தேசம் என்பது ஒரு தனிச் சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என்று தெரவிவித்துள்ள அகில மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் சகல சமூகங்களின் உரிமைகளும் உறுதிப்படுத்ப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி செயற்பட எவருக்கும் முடியாது என்றும் கூறினார்.
வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வகளை இன்று (2013.04.06) வவுனியாவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன், வுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி, நகர சபை தலைவர் கணரட்ணம் உட்பட லரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு மேலும் அமைச்சர றிசாத் பதியுதீன் பேசுகையில்,
வடக்கில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் இழப்புக்களை எமது மக்கள் சந்தித்தனர். இந்த இழப்புக்கள் மட்டுமன்றி அபிவிருத்திகளும் மக்களிடமிருந்து அகன்று சென்றிருந்தன.2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான சூழலின் பின்னர் தற்போது சகல துறைகளும் அபிவிருத்தி கண்டு வருகின்றன.
அன்றைய சூழலினால் எமது இளைஞர் சமூகத்தின் ஆற்றல்களும்,திறமைகளும் முடக்கப்பட்டிருந்தன.சர்வதேச அளவில் பகழை வன்னிக்கு பெற்றுத் தரக் கூடிய சிறந்த வீர்ர்களை எம்மால் உருவாக்க முடியாமல் போனது.அது பெரும் கவலைத்தரும் விடயமாகும்.
தமிழ்,முஸ்லிம்,சிங்களம் என்ற பேதங்கள் இன்றி இப்பிரதேச மக்கள் ஒன்றாக வாழந்து வருகின்றார்.அந்த சுதந்திரம் இங்கிருக்கின்றது.இன்று இந்த விளையாட்டு மைதானத்தில் கூட சகல இன வீர்ர்களும் கலந்து நிற்பது வரவேற்குரியது.
இதனை தான் இந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார் என தெரவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயராக உள்ளதாகவும் கூறினார்.

Post a Comment