Header Ads



மத உரிமைகளை பாதுகாக்க சட்டம் - அமைச்சர் சம்பிக்க எதிர்ப்பு


இலங்கையின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவையினை பாராளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ குறிவைத்து ஏதேனும் ஒரு குழு செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அது பொதுபலசேனாவாக இருந்தாலும் சரி, இன, மத உரிமைகளை பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை எனவே எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவை ஒன்றினை சமர்பிக்க திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

..........................................................................................................

மத உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் கொண்டுவரப்படும் சட்டமூலத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடிப்படைவாத மத அமைப்புகள் மூலம் மதங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார, எதிர்வரும் 11 ஆம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ள அமைச்சரவை யோசனைக்கு, எதிர்ப்பை தெரிவிக்கப்படும்.
  
 கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் அது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த யோசனையை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, தமது எதிர்ப்பையும் மீறி அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் தாம் கடுமையான தீர்மானத்தை எடுக்க போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 comments:

  1. என்னடா அணு ஆயுதமா பாவிக்கப்போற,

    ReplyDelete
  2. கண்டவன், கடியவன் எல்லோரையும் அரசியலுக்குள் தூக்கிப் போட்டால் ஏற்படும் விபரீதத்தை அரசாங்கம் இப்போதாவது உணருமா? பாம்பு மனிதனைத் தீண்டுவதால் பாம்புக்கு எப்பலனுமில்லையல்லவா? இதே போன்று மனித நேயத்தையே சீண்டும் மனிதப் பாம்புகள் ஓரங்கட்டப்படும் வரை இந்நாட்டை வளப்படுத்தவே முடியாது. மிஸ்டர் சம்பிக்க பாராளுமன்றத்தில் புகுந்த காலந்தொட்டு மக்களுக்குப் பிரயோசனமான ஏதாவது கருத்துக்களை முன்வைத்துள்ளாரா? முஸ்லிம்களை சீண்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட ஒன்றுக்கும் உதவா கபடன்.

    ReplyDelete
  3. பிர்அவ்னின் பிரதி இவன்.
    அபுஜஹ்லின் கழிவு இவன்

    ReplyDelete
  4. Another opportunity to identify the friends and enemies of Sri Lankan Muslims and fairness!

    ReplyDelete
  5. வயசான காலத்தில் அமைச்சர் வாசுவுக்கு இருக்கும் தைரியம் நம்ம சொரணை கெட்ட அரசியல் தலைமகளுக்கு இல்லை. பேசினாலும் பேசுவதெல்லாம் எங்கயாவது ஒரு மூலையில் யார் காதுக்கும் படா வண்ணம்... பிரச்சினை எல்லாம் முடிந்த பிறகு எப்படி தைரியமா வந்து பேசுறாங்க பாருங்க. வெட்கம், மானம் கெட்ட ஜென்மங்கள்.
    பாழ் வீட்டுக்குள் சட்டி பானை உடைக்கும் வீரர்கள்..

    ReplyDelete

Powered by Blogger.