Header Ads



ஹொஸ்னி முபாரக்கை விடுவிக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு


எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான மறுவிசாரணை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் புரட்சியின் போது பதவி விலகிய முபாரக் மீது 900 மக்களை கொன்றது உள்பட நடைபெற்ற வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டு காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முபாரக்கிற்கு பலமுறை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் அடிப்படையில், தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை முடிவடையும் வரை இன்னும் 15 நாட்களுக்கு முபாரக் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

2 comments:

Powered by Blogger.