கடாபியின் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்களை நீக்க ஆர்ப்பாட்டம்
லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு புரட்சியின் முடிவில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மறைந்த பின் அமைந்த ஆட்சியில், கடாபியின் பதவிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்களே அனைத்து துறைகளிலும் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
அவர்களை பணி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நேற்று நவீன துப்பாக்கிகளுடன் சென்ற பொதுமக்கள் லிபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக கட்டிடத்தை முற்றுகையிட்டனர். கடாபியின் ஆதரவாளர்களை பணி நீக்கம் செய்யாவிட்டால், இதர அமைச்சக கட்டிடங்களையும் விரைவில் முற்றுகையிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Post a Comment