கஸகஸ்தானை வீழ்த்தியது இலங்கை - புதல்வர்கள் விளையாடுவதை கண்டுரசித்த மஹிந்த
இலங்கை ரக்பி அணி ஏஷியன் பைவ் நேஷன்ஸ் ரக்பி தொடரில் சிறந்த ஐந்து அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஏஷியன் வைப் நேஷன்ஸ் முதலாம் பிரிவிற்கான ரக்பித் தொடரின் கடைசிப் போட்டியில் கஸகஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
போட்டியில் 49-18 என்ற புள்ளிகள் என்ற கணக்கில் இலங்கை வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரு புதல்வர்களும் இலங்கையணி சார்பாக விளையாடினர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்களையும், வெற்றி கேடயத்தையும் வழங்கிவைத்தார்.

.jpg)
.jpg)

Fantastic buddy, This how your dad and his sibling are kicking to us.
ReplyDelete