பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி, திறந்தும் வைத்த பௌத்த தேரர் (பிரத்தியேக படங்கள்)
(வரக்காபொலையிலிருந்து அபூ ஸஹ்லா)
பள்ளிவாசல்களை தாக்கும் தேரர்கள் உள்ள காலத்தில் அதனை பாதுகாக்கும் தேரர்களும் உள்ளார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம்
மூவினங்களையும் சேர்ந்த பௌத்த, இந்து,இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் நல்லுறவுக்கு முன்மாதிரியான நிகழ்வொன்று கேகாலை மாவட்டத்தின் உந்துகொட பகுதியில் இடம்பெற்றது.
கேகாலை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய முஸ்லிம் கிராமமான உந்துகொட கிராமத்தில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1890 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலே உந்துகொட மொஹைதீன் ஜூம்ஆ பள்ளி வாசலாகும். சுமார் 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளிவாசல் அமைந்துள்ள கிராமத்தில் சுமார் 38 முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இநத பழைய பள்ளி வாசலை நவீனமயப்படுத்தி, 2 மாடிகளை கொண்ட புதிய பள்ளி வாசலாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தலைநகரிலுள்ள சமூக சேவை அமைப்பொன்று இதற்கென 40 இலட்சம் ரூபாவை செலவிட்டிருந்தது. மொத்தம் 65 இலட்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் விசேட அம்சம் என்னவெனில் இப்பள்ளி வாசலின் நிர்மாணிப்பணிகளுக்கான அடிக்கல்லை திக்கோப்பிட்டிய பிரிவெனாவின் பிரிவெனாபதியும், பௌத்த பாலி பல்கலைககழக பேராசிரியருமான எக்கிரியகல நந்த தேரர் நாட்டி வைத்ததிருந்ததுடன் அதே தேரர் இப்பள்ளி வாசலை திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தேரர் உட்பட 10 இற்கும் மேற்பட்ட பௌதத தேரர்களும் இந்து கிறிஸ்தவ மத தலைவர்களும் வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ், சிங்கள மக்கள் இப்பள்ளி வாசலின் நிர்மாண பணிகளுக்கு சிரமதானம் மூலம் உதவி செய்திருந்தனர். திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட மக்களுள் 50 சதவீதத்திற்கும் கூடுதலானோர் இந்து, மற்றும் பௌத்த சகோதரர்களாவர். வருகை தந்த அனைத்து மக்களுக்கும் பகல் போசனம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அருகிலிருந்த தமிழ் பாடசாலையொன்றின் மதில் அகற்றப்பட்டு, பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு உபசரிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த தமிழ் பாடசாலை அதிபர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் மொஹாமட் நஸாரின் முயற்சியினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கௌளப்பட்டிருந்தன.




Best way to approach other religious people and we can help them with Shirk activities Example food and shelters
ReplyDeleteIslaam maarkam thanith thuvamaanathu. matraya matham galey naam mathikkanum. Enraalum intha murayil ithu shariyaa haathu. Enenraal ippadi ottrumey pada mudiyaathu ithu pooliyaanathu. Ippo nalla ullam padeytha anniyarhal palli thirappaarhal. Athu pool avarhalum emmey avarhalin Madavaasal thirakal aleypaarhal. naam poohavilleyaanaal Athu mana kashappey yetpaduththum. naam poonaal shirk itku thuney Poona paavam emmey shaarum. Atha naal LAKUM DEENUKUM VALIYADEEN enra vahayil naam seyal padanum. poothu vaana vidayamgalil thaan naam shernthu poohanum. Thavira marka vidayamgalil alla. Pooliyaana ottrumeyey vittu maarkam solitarum vitham otrumeyaahuvoom.
ReplyDeleteNEENGAL VANANGUVATHEY NAAN VANANGUFAVAN ALLA. NAAN VANANGUFAVANEY NEENGAL VANANGAVAVAR ALLA.
Emathu palliyil pirith ootha naam viduvathilley poonru avarhalin matha vaasal halil naam nonbu thireppathey thavirkkanum. Ithuhum pooliyaana otrumeye.
ENAVE Veru valiseythu otrumeyk kaaha uleyppom
Shaththiyath thudan ashaththiyathey kalakkaathir.
ReplyDeleteMatham galukkidaye otrumey varuvathu ippadiyaahaathu. Intha vidayathil shernthu pooha mudiyaathu. naam avarhalukku tholley kodukkak kuudaathu. Avarhalidamum athey ethirpaarpathaaha vilanga veyppom
ReplyDeleteஇது வரவேற்கக்கூடிய விடயம்.இதுவும் சிர்க் என்று சொன்னால் நம் ரசூல் ஸல் அவர்கல் எந்த விடயத்திலும் ஓன்றுபட்டு செயல்பட வேன்டாம் என்று கூரிஇருப்பார் .மாராக அந்நிய இனங்கலோடூ வியாபாரம் அரசியல் எதுவும் செய்திருக்க மாட்டார்கள் .
ReplyDeletemassa allah
ReplyDeleteசத்தியத்துடன் அசத்தியத்தைக் கலப்பதில்தான் இன்று அதிகமான நிருவாக சபையினரும் உலமா சபையும் மும்முரமாக இருக்கிறார்கள். அதற்கேற்றாட்போல அரசியல்வாதிகள் நமக்கு. மாற்றுமத அறிஞர்களுக்கு ருக்கூ செய்யும் தலைவர்கள்!!!
ReplyDeleteதகுதியற்றவர்களெல்லாம் தலைவர்களாக வராமல் இறுதி நாள் வராது.
அல்லாஹ்விடமே நமது ஈமானைப் பாதுகாக்க துஆ செய்து கொள்வோம்.
செய்வதை செய்யவிட்டுவிட்டு மௌலவிமார்களும் கையைக்கட்டி வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார்களே. பரிதாபம். இதுதான் இஸ்லாம் போதிக்கும் நல்லுறவா? அந்நிய மக்கள இஸ்லாத்தைப் படிக்கவில்லையே என்று பார்த்தால் முஸ்லிம்களே இன்னும் படிக்கவில்லை என்பதையே இச்செயல் தெளிவுபடுத்துகின்றது. அல்குர்ஆன் முஷ்ரிகீன்கள் பற்றிக் கூறும் வசனங்களை மத்திரமாவது வாசித்துப் பாருங்கள்.
ReplyDeleteAsthawfirulla .. lakum theenukum valiyatheen enum vasanaththay padiyuggal ulamakkuhal
ReplyDelete