Header Ads



பாராளுமன்றத்தில் ஹலால் - முஸ்லிம், சிங்கள அமைச்சர்களிடையே கடும் வாக்குவாதம்



பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று திங்கட்கிழமை, முதலாம் திகதி நடைபெற்ற ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

சுமார் 2 மணித்தியாலங்களாக நடைபெற்றுள்ள இந்த வாக்குவாதத்தில் இதுகாலவரையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழை வழங்கியமை தவறு என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஸ் குணவர்த்தனா ஆகியோர் வாதிட்டுள்ளனர்.

எனினும் இதற்கு அமைச்சர்களான பௌஸி, ரவூப்ஹக்கீம், றிசாத்பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தை மார்க்க ரீதியாக வழிநடாத்தும் தகுதியும், பொறுப்பும் ஜம்மியத்துல் உலமா சபைக்கு இருப்பதாகவும், அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கியதில் தப்பு  எதுவும் கிடையாதென முஸ்லிம் அமைச்சர்கள் வாதிட்டுள்ளனர்.

அத்துடன் எதிர்காலத்தில் ஹலால் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கும், முழு நாட்டிற்கும் தெளிவை வழங்குவதற்காக ஒரு பொறிமுறை ஏற்படுத்த வேண்டுமெனவும் முஸ்லிம் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் மிகத்துணிவுடனும், ஆக்ரோசமாகவும் இதன்போது செயற்பட்ட நிலையில் ஹலால் தொடர்பில் எத்தகைய இறுதி தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமைச்சரவை உபகுழுவுக்கு தலைமைதாங்கிய முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, அமைச்சரவை உபகுழுவானது ஒரு வரைப்பை தயாரிக்குமெனவும், அது முஸ்லிம் அமைச்சர்களின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தமது சம்மதத்தை பெற்ற பின்னரே ஹலால் தொடர்பில் அமைச்சரவை உபகுழு இறுத்தித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

10 comments:

  1. Amaicher hakkeem inndonisia ponatha oru thaval appadiyanal eppadi koodathil panketar

    ReplyDelete
  2. மாஷா அல்லா , ஹலால் இது எமது இஸ்லாமிய மார்கத்தின் கடமை எமது உரிமை அமைச்சர்கள் குரல் கொடுத்ததை நினைத்து கடும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அல்லாஹ உங்களுடன் இருப்பன் தூய்மையான உள்ளத்தோட இஸ்லாத்துக்கு குரல் கொடுக்கும் காலமெல்லாம்

    ReplyDelete
  3. அப்பாடா ஏப்ரல் பூல் தினத்தில் இப்படி ஒரு நிகழ்வா ...?? ரொம்ப மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் ஒற்றுமை கிடைக்கட்டும் நியாமான தீர்வு

    ReplyDelete
  4. அன்பின் முஸ்லீம் சகொதரர்களே, இன்று நடக்கும் யுத்தம் கட்சிபாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வுடன்கலந்த ஒற்றுமைக்குரிய அவசரகால நிலைமையே. இந்த நேரத்தில் கட்சியோ, பிரதேசமோ, மத கொள்கைகளோ எம்மைப்பிரித்துவிடகூடாது. அவ்வாறு நாம் எணவும் கூடாது கொமென்ட்ஸ் எழுதவும் கூடாது. இந்த செய்தி ஏப்ரல் பூள் செய்தியுமல்ல, அவர் அவசரப்பட்டு இந்தொனேசியா பொகவுமில்லை. இவர்கள் எதுவும் செய்யவில்லையென பரப்பத்தேவையில்லை. நேற்று ஃபளசியின் தலைமய்யில் கூடித்தான் இன்று எவ்வாறுனடந்துகொள்வதென்று முடிவெடுத்தபடி நடந்திருக்கிறது. நல்லவிடயம். பல நாளைக்குரிய வெளினாட்டு பயனத்தை இருனாளிள் திரும்ப முடிவெடுத்திருக்கிறார் எனவும் தகவல். இன்று அரசு உள்ள நிலையில் எந்த முஸ்லிம் கட்சியும் அதற்கு தேவையில்லை என்பது வெளிப்படை. எனவே இவர்கள் எல்லாம் வெளியே வந்து சும்மாஇருப்பதைவிட எதையாவது செய்யாவிட்டலும் ஆபத்துக்களையாலும் தடுக்கட்டுமே என நாம் விட்டுவிட்டு நமது ஏனய முயற்ச்சிகளை செய்யவேன்டும். முடியுமானவற்றுக்கு ஒத்துளைப்பு, இல்லவிட்டால் காட்டிகொடுப்பு இலை என்றனிலைதான் தேவை. ஆனால், விளிப்பாய் இருக்கவேன்டும்

    ReplyDelete
  5. INNUM INDONESIA POHALLA POHA IRUKKAR

    ReplyDelete
  6. Enna April Fool Ellam pechulla than Mudivu enna???????

    ReplyDelete
  7. nalla vidayaththil muslimkalin pirathinithikalai onrinainthu seyatpada allah vidam pirarthippom

    ReplyDelete
  8. ottumaiyaha thairiyamaha mudivuhalai yadungal PANATHTHUKKO; PAYATHTHUKKO ADIPANIYATHINGA amaicher maarkaleeeeeeeeee plz

    ReplyDelete
  9. இவ்வளவு நாளும் எங்கவாப்ப ? இருந்திங்க...



    காந்தி செத்தப் போள்ட்டாரா? ................

    ReplyDelete

Powered by Blogger.