இஸ்லாமிய நிலையத்தை அடித்து நொறுக்குவோமென எச்சரிக்கை
கொட்டிகாவத்த மகாபுத்துகமுவ பகுதியில் ஐவேளை தொழுகை நடைபெற்றுவரும் இஸ்லாமிய நிலையத்தை அடித்துநொறுக்கப் பேவதாக பௌத்தசிங்கள இனவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
குறித்த இஸ்லாமிய நிலையத்தில் தொழுகை நடாத்தும் மொஹமட் பாசில் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் தொலைபேசி மூலமாக வழங்கிய தகவல்கள் வருமாறு,
இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி ளுஹர் தொழுகை நடைபெறுவதற்கு சற்றுநேரத்திற்கு முன்னர் வருகைதந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த சிலர் தொழுகை நடைபெறும் இஸ்லாமிய நிலையத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் இந்த இஸ்லாமிய நிலையத்தை அங்கிருந்து அகற்றிவிட வேண்டுமெனவும், தொழுகை நடாத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
தமது எச்சரிக்கையை கவனத்திற்கொள்ளவில்லையாயின் இஸ்லாமிய நிலையத்தை அடித்து நொறுக்கி விடுவோமெனவும் அச்சுறுத்தினர். சற்றுநேரத்திற்கு பின்னர் தாம் பௌத்த மதருகுவுடன் அங்கு வருகைதருவோமெனவும் கூறிவிட்டுச் சென்றனர் சென்றனர். தற்போது இஸ்லாமிய நிலைய நிர்வாகிகள் இதுதொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர் என்றார்.
அத்துடன் இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த மேலதிக தகவல்கள் வருமாறு குறித்த இஸ்லாமிய நிலையம் கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டதொன்றாகும். இதுதொடர்பில் அப்பகுதி முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போது வந்து அடித்து நொறுக்கப் போகிறோம் என்று சொல்லிச் செல்லும் அளவுக்கு அவர்களுக்கு அதிகாரமும் தைரியமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteகொடுத்தது யாரு???????
Don't say anything except yes ok
ReplyDelete