Header Ads



அரசியல்வாதியின் உள்ளம் தூய்மையானதாக அமைய வேண்டும் - ரவூப் ஹக்கீம்


தற்போது உள்ள அரசியல் பாதாளத்தைப் போன்றதாக உள்ளதை நான் உணர்வுபூர்வமாக அறிந்துள்ளேன்.  நேற்று யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது உள்ள அரசியல் பாதாளத்தைப் போன்றதாக உள்ளதை நான் உணர்வுபூர்வமாக அறிந்துள்ளேன். தந்தை செல்வா காலத்தில் இருந்த அரசியல் நிலைமை இன்றைய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் வரவேண்டும். உண்மையான சேவை நோக்கம் கொண்ட அரசியல்வாதியின் உள்ளம் தூய்மையானதாக அமைய வேண்டும். 

83 ஆம் ஆண்டின் இனக்கலவரம் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் 90 ஆம் ஆண்டும் முஸ்லிம்களுக்கு வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்தது. முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்ற காலப்பகுதி இது. 

முஸ்லிம்களுக்கு எதிராகப் பல படுபாதகக் கொலைகள் இடம்பெற்றன. 90 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மத்தியில் மறக்க முடியாத வடுக்களைத் தோற்றுவித்தது. இது முஸ்லிம்களுக்குத் திருப்பு முனையாக அமைந்தது.

இலங்கைப் பிரகடனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக உருவாக்கப்பட்டதே முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம். தமிழர்களுக்கு தாயகத்தைப் பெற்றுக் கொடுத்ததில் முஸ்லிம்களுக்குப் பங்குண்டு என்று கூற தந்தை செல்வாவினால் மட்டுமே முடியும்.

3 comments:

  1. திருப்புமுனை என்ற சொற்பதம் பொதுவாக எதிர்மறையிலிருந்து நேர்மறையான மாற்றங்களைக் குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இந்த உரை என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. ஒரு வேலை செய்தியை எழுதிய செய்தியாளரின் கவனக் குறைவோ தெரியவில்லை.

    ReplyDelete
  2. 83ம் ஆண்டு இனக் கலவரமும் 90ம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் வரலாற்றின் திருப்புமுனைகளல்ல; மாறாக, அவை நெருப்புமுனைகள்!

    ReplyDelete
  3. First you should about you.

    ReplyDelete

Powered by Blogger.