முஸ்லிம்கள் குறித்து பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய விஷேட உரை
முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால் அல்லது குண்டர்களால் தாக்கப்பட்டால் அல்லது அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் நாம் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்கமுடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் மற்றும் பதற்றம் ஆகியன குறித்து வேதனை அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருபவர்கள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக மிகப்பெரும் பங்களிப்பை பல நூற்றாண்டுகளாக செய்துவந்துள்ளார்கள். அவர்கள் தங்களுக்கென தனித்துவமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உடைகளை கொண்டுள்ளார்கள் மற்றும் தங்கள் மதத்தின் மீது தெய்வ நம்பிக்கை கொண்ட பற்றாளர்கள்.
8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை பரவியிருந்த இஸ்லாமிய பொற்காலத்தின் பண்பாடு சார்ந்த கொடையாளர்களாகிய இலங்கை முஸ்லிம் மக்கள் கலை மற்றும் இசைஇமருத்துவம் மற்றும் சட்டம் மற்றும் விஞ்ஞானம், தொழில் முயற்சி கல்வி அறிவு மற்றும் இன்னோரன்ன துறைகளின் வளர்ச்சியில் உயர்நிலைளை அடைந்துள்ளார்கள்.
இன்று எவ்வாறாயினும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த கசப்பான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்துள்ள கும்பல்களின் பல்வகையான வன்செயல்கள் பற்றி நான் மீண்டும் சொல்ல வேண்டிய தேவை இல்லை.
பட்டப்பகலில் முன்பின் தெரியாதவர்களால் பழமை தழுவிய மத உடைகளை அணிந்த முஸ்லிம் பெண்கள் கெட்ட நோக்கத்துடன் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் அவமரியாதையான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் மற்றும் பதற்றம் ஆகியன குறித்து வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ் மக்களினதும் முஸ்லிம்மக்களினதும் உறவு எப்போதும் மிகவும் நெருக்கமானதாக இருந்து வந்துள்ளது. சில சமயம் உறவு மிகவும் அரிதானக இருப்பினும் வன்செயல் மற்றும் குரூரத்தனம் காரணமாக வெட்கப்படக்கூடியதாக இருந்தது. என்றாலும் இரு தரப்பு உறவு மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகின்றது.
மற்றவரின் விதியில் உயிர்பிழைக்கலாம் என்ற அடிப்படையில் எம் மக்கள் உறவு பின்னிப்பிணைந்துள்ளது.சிங்களவர்கள் மலாய் மற்றும் பறங்கியர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்திருப்பது போன்றே நாம் முஸ்லிம்மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளோம் பொது மொழி மற்றும் வாழ்விடம் ஆகியற்றின் இணைப்பை இலகுவாக துண்டிக்கமுடியாது.
ஆகவே, எமது முஸ்லிம் சகோதரர்கள்,சகோதரிகள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால்; அல்லது குண்டர்களால் தாக்கப்பட்டால் அல்லது அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் நாம் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்கமுடியாது
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
தினமும் நாம் கேட்கும் வெறுப்பூட்டுகின்ற அவதூறுப் பேச்சுக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். . இந்த அவதூறுப்பிரசாரத்துக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலோர் இவ்வாறான அவதூறு நடவடிக்கைகளை மன்னிக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். அவர்கள் மற்றவர்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து சமாதானமாகவும் இன ஒற்றுமையுடனும் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகின்றார்கள்.
மிகமோசமான கொடூரச்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாம் இந்த நாடும் உலகமும் பொறுப்புக்கூறும் தன்மை நீதிஇ உண்மையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் அநீதி இடம்பெறாது என்ற உத்தரவாதம் தரவேண்டும் என்று கோருகின்றோம்.
சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என்பதை நாம் அழுத்திக்கூற விரும்புகின்றோம். அண்மைக்கால சம்பவங்கள் அரசாங்கம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்பதை உணர்த்துகின்றன.
பாரபட்சமாக நடந்து கொள்வதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்படி உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். tm
sammanthan better than Hakeeb
ReplyDeleteA matured statement reflecting the image of the late leaders like SJV and Mr. Amirthalingam. Thank you sir.
ReplyDeleteA matured statement reflecting the image of the late leaders like SJV and Mr. Amirthalingam. Thank you sir.
ReplyDeletethank you very much ayya awarhale.
ReplyDeleteIf SLMC can consume a cup of your urine they will also gain enough guts. Unfortunately, they are not eligible even for having such a cup of your urine Mr. Sambandan. Anyhow, thanks for understanding that our representatives are busy in licking MARA’s back.
ReplyDeleteTHANKS MR.SAMBANTHA.
ReplyDeleteYOU HAVE DONE BETTER THAN OUR MUSLIMS.
Thank you sir....
ReplyDeleteWELL DONE
ReplyDeleteசம்பந்தன் ஐயா,
ReplyDeleteபாராளுமன்ற சம்பிரதாயங்கள், நிலையியல் கட்டளைகள், தனி நபர் பிரேரணைகள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்கள் , விஷேட கவன ஈர்ப்பு பிரேரணைகள் குறித்து நமது முஸ்லிம் தலைவர்களுக்கும் எம் பீ மாருக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்களே..!
உங்கள் நிகழ்ச்சிநிரல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை....எதோ முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த உங்களை பாராட்டுகிறோம்...
திரு சம்பந்தன் ஜயா!நன்றி.மிகத்தெளிவாக சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteமுஸ்விம்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களிடம் நீங்கள் சொல்ல வில்லை.முஸ்லிம்களைப்பற்றி மிக நன்றாக தெரிந்தவர்களிடம்தான்
சொல்லியிருக்கின்றீர்கள்.எனவே அவர்கள் பாசாங்கு செய்ய வில்லை யென்றால் பிரதி பலன் நன்றாகவே இருக்கும் என நம்பலாம்.
thanks for your good thought....
ReplyDeletethanks, Dear sir i thing so you are great mane ,thank you very much sir.you have nicely done.
ReplyDeleteEminent religious, professional and political leaders should unite for a common cause. They should form a common front to inculcate the value of tolerance and coexistence among all Sri Lankans if we are to forward march as a nation with international support.
ReplyDeletethank you very much sir
ReplyDeleteரெம்ப நன்றி அய்யா ! முஸ்லிம் அமைச்சர்களுக்கு இல்லாத வீரம் சமூக பற்று உங்களிடம் உள்ளது .
ReplyDeletenanry iya.irunthalum innum koncham phorumai kaphom.meerinal phogi eluvhom.
ReplyDeleteungalukku enro orunal enethu aatharavu kittum.
இதற்குப் பிறகும் முஸ்லிம் mp மார் உயிர்வாழனுமா நாண்டுக்கிட்டு சாகலாம் . கொஞ்சம் சரி சுரணை இல்லையா வெட்கம் கெட்டவர்களே .anyway tks Samanthan MP
ReplyDeleteஅடச் சீ...... திருந்தாத சோனிகளே!!!
ReplyDeleteபுத்தியை அடகு வைத்த சமுதாயமே!
பேசிவிட்டால் முஸ்லிம் சமூக நண்பராகிவிடுவாரா? முல்லைதீவில், மன்னாரில் மற்றும் இன்ன பிற வடகிழக்குப் பிரதேசங்களில் முஸ்லிம்களை மீள் குடியேற விடாமல் ஆர்ப்பாட்டம் செய்வது இவருடைய, டக்லசுடைய கூட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் உங்களுக்கு சார்பாகப் பேசிவிட்டால் போதுமே ஓடி வந்து நன்றி சொல்ல!
நன்றி தெரிவிக்க முன் கேளுங்கள் 'முல்லையில் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்துக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை' என்று சொல்லச் சொல்லி. இவர் போன்ற நரிகளை நம்புவதை விட BBS ஐ நம்பலாம்.
அப்படி என்ன தான் உலகப் பற்று உங்களுக்கு. திருந்தவே மாட்டீர்களா? விட்டால் இவருக்கு "முஸ்லிம்களின் விடுதலை வீரன்" என பட்டம் கொடுத்துவிடுவீர்கள் போல.
எங்களுக்கும் பேசிப் பேசி சலித்து விட்டது. உங்கள் மூளையை பாவிக்கவே மாட்டீர்களா?
முல்லையில் செய்த அராஜகத்தை மறைக்க இவர் பாராளுமன்றத்தில் நமக்கு சார்பாகப் பேசிவிட்டால் அதை உண்மையான பாசம் என்று நம்பி, நன்றி வேறு. பாருங்கள் கீழுள்ள jaffna muslim link ஐ.
http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_3696.html
http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_6627.html
உங்கள் பின்னூட்டல்களைப் பார்த்தால் சுத்தமாக இது போன்ற செய்திகளைப் பார்க்க மாட்டீர்கள் போலத் தெரிகிறது. இவர் முஸ்லிம்களில் அக்கறையுடன் சொல்லி இருப்பாரெனில் முதலில் பாராட்டுபவனாக நான் இருந்திருப்பேன். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் என்பதற்கு அண்மையில் நடந்த முல்லை சம்பவமும், இனப் பிரச்சினைத் தீர்வில் அப்போதிருந்து இன்றுவரை இவரின் அணுகு முறையும் சாட்சி.
அரசியல் வாதிகளால் ஏமாற்றமடைந்து, உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு யாராவது பேசமாட்டானா? என்று பார்த்துக் கொண்டிருப்பது. பேசிவிட்டால், இதோ வந்து விட்டார் அது ,இது என்று பாராட்டு மாலைகள், நன்றிகள்.... நம்முடைய அரசியல் கோமாளிகள் செல்லாக் காசுகள் என்பதற்காக நரியை நம்புவதா? சட்டி சுடுகுதேண்டு அடுப்புக்குள் பாயும் அப்பாவி சோனகனே பேசுபவன் யாரென்று சிந்திக்கவே மாட்டாயா? ஒரு நேரம் "இந்தக் கோழைகளுக்காகவா உன் நேரத்தை நீ வீணடிக்கிறாய்?" என்று எண்ணத் தோன்றுகிறது.
மரணப் பயத்தையும், உலக ஆசையையும் விட்டொழிக்கும் வரை உங்களால் நிதானமாய் சிந்திக்கவே முடியாது. இப்படித்தான் "வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பி பயத்தாலேயே விழுந்து அழிந்து விடுவீர்கள்.
அதற்குள் ஒருவர் "urine " அது இதுவென்று. முஸ்லிம் என்பதற்கு ஒரு பண்பு வேண்டாம்? சினிமாவில் ஊறி, ஊறி இஸ்லாமியப் பண்பை விட கேடு கெட்ட அனாச்சாரம் தான் கலாச்சாரமாகிவிட்டது. ஒரு முஃமினுக்குரிய பண்பு கொஞ்சம் கொஞ்சமாக செத்துவிட்டது. ஒரு மக்கள் மன்றத்தில் பேசுகிறோம் என்ற பண்பு எங்கே போய்விட்டது?
இவர்களுக்கு என்றுமில்லாதவாறு புதியதொரு அன்பு பொத்துக் கொண்டு வந்து அதை சொரிவார்களாம் இவர்கள் ஓடோடிச் சென்று அள்ளிக்கொள்வார்களாம். BBS கு பக்க பலமாக் இருக்கும் அதே நோர்வே தான் இந்தக் கும்பலுக்கும் பக்க பலமாக இருக்கிறார்கள் என்ற அடிப்படை கூட தெரியாத அப்பாவி மக்களே!! நானும், நீங்களும் ஒரு விடயத்தில் முடிவெடுப்போம். "இம்மையா, மறுமையா?". நீங்கள் நினைப்பது போல பிரச்சினை ஒன்றும் முடிந்துவிடவில்லை. இனித்தான் பனிப்போர் ஆரம்பம். மேற்குலகம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள முஸ்லிம் உறவைப் பிரிக்க ஆரம்பித்திருக்கும் பனிப்போர். நிதானம் இழந்தீர்களானால், உலக ஆசையில் மூழ்கிவிட்டோமானால், என் வார்த்தையை எழுதிக்கொள்ளுங்கள் "இன்ஷா அல்லாஹ் இனி அழிவுதான் ஆரம்பம்". இதை என் சொந்தப் புத்தி கொண்டு சொல்லவில்லை. குர் ஆனைப் புரட்டுங்கள். எல்லை மீறிய சமூகத்துக்கு நடந்த வரலாறுகளைப் படியுங்கள். நான் சொல்வது புரியும். இப்போதே நானும் நீங்களும் அல்லாஹ்வின் அவன் தூதரின் பக்கம் திரும்பினால் தான்.
மிக்க நன்றி சம்பந்தன் ஐயா அவர்களே இன்று இந்த கொடியவர்களான சிங்கள இன வெறியர்கள் விதைக்கின்ற விதை நிச்சயம் மீண்டும் ஒருமுறை இந்த நாடே ஈடு செய்யவேண்டி வரும் 1956ல் SWRD பண்டாரநாயகே தமிழர்களுக்கு செய்ததை இன்று அவர் ஆரம்பித்த கட்சியில் உள்ளவர்கள் தூண்டி விடுகின்றார்கள் அவர்களின் நோக்கம் இனியும் தமிழ் பேசும் மக்களின் வோட்டு நிச்சயம் அவர்களுக்கு கிடைக்காது என்று தெரியும் சிங்கள வோட்டு இரண்டாக பிரியும் போது தமிழ்பேசும் மக்களின் வோட்டுத்தான் ஆட்சியை தீர்மானிக்கும் என்று அதனால்தான் அன்று தமிழர்களுக்கு எதிராக பாவித்த துரும்பை இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியர்களை இறக்கிவிட்டு கை கட்டி பார்த்துநிட்கிரார்கள், வட மகான தேர்தல் வந்ததும் புரிந்துவிடும் துரோகிகள் எப்படி தூக்கி வீசபப்டுவர்கள் என்று.
ReplyDeleteஇன்று இந்த இனவெறியர்கள் அமெரிக்க சென்றுள்ளனர் அங்கிருந்து இஸ்ரவேல் சென்று அவர்களின் முஸ்லிம்களை ஒழிப்பதற்கான ஆலோசனையை யும் ஆசீர்வதததயும் பெற்று வந்து மீண்டும் முஸ்லிம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் அப்போதும் எமது முஸ்லிம் தலைவர்கள் நக்குண்டார் நாவிழந்தார் என்பதற்கு ஒப்ப பேசா மடந்தயாகவே இருப்பார்கள் ஆனால் சொந்த ஊரில் மட்டும் வீரவசனம் பேசுவார்கள் இவர்களால் முஸ்லிம் சமூகம் இதுவரை நன்மை அடைந்ததும் இல்லை, இனிமேல் அடையப்போவதும் இல்லை, குறைந்த பட்சம் நீங்கள் மட்டுமாவது எங்களுக்காக குரல் கொடுங்கள் அதேநேரம் உங்களோடு இருக்கும் சில mp க்கள் முஸ்லிம் விரோதப்பேச்சை கைவிடசொல்லுங்கள் இச்செயல்தான் நமக்கிடையில் இடைவெளியை அதிகரிக்கச்செய்கிறது .
மீன்றும் எமது பாராட்டுக்கள் உங்களது முதிர்ச்சியும்,அறிவும், ஆளுமையும், தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், வழியில் உங்களை எங்களுக்காக பேசவைக்கிறது நன்றிகள் பல ஹக்கிம் துரோகம் செய்தாலும் முஸ்லிம்கள் உங்களை வெறுக்கவில்லை.
We should note that again the Azwer and the Cader interupted and scolded at R. Sampanthan in Parliament while Indian delegates were observing from the Gallery...
ReplyDeleteஅன்புடன் சம்மந்தன் ஐயா அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் பாராளுமன்ற உரையை பார்த்து மிகவும் நன்றியுடன் தாங்களை மனதில் நினைத்துக்கொண்டவனாக இதனை எழுத நினைக்கின்றேன் .
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் குழுக்கள் தோன்றி வெவ்வேறு பெயர்களில் வித்தியாசமான வழிகளில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபாட்டிருந்தபோது கணிசமான
இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களும் அக்குளுக்களுடன் இணைந்து போராடினர்.இது போராட்ட வரலாற்றில் மறைக்காபட்டிருந்தாலும் மக்களால் முருக்க முடியாத ஒரு விடயம் ஏனெனில் என்னுடன் படித்த நண்பர்களில் ஒருவர் புலிகள் இயக்கத்திலும் இன்னொருவர் டெலோ இயக்கத்திலும் சேர்ந்து இயங்கி பின்னர் கொல்லப்பட்டு விட்டனர்.காலப்போக்கில் சில இயக்கன்களின் அபரத வளர்ச்சியானது ஏனைய குறிப்பிட்ட இயக்கங்களினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது அல்லது மக்களிடையே பிரபல்யம் இல்லாமல் செய்தது எனவும் கூறலாம்
அவ்வாறு மேலோங்கிய ஒரு இயக்கம் தமிழ் பேசுகின்ற முஸ்லீம்களை வட மாகாணத்திலிருந்து ,அடுத்தவேளைக்கு எதை உண்பது?அழுக்கு உடையை எப்படி மாற்றுவது?அடுத்து எங்கு போவது? என்று தெரியாமலும் புரியாமலும் ,தம் பெற்றோரின்கரங்களின் விரல்களை இறுகப்பற்றிப் பிடுத்துக்கொண்டு அவர்களது முகங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்காபோகின்றது? என்பன போன்ற புதிர்களுடன், நிகழ்கால இருட்டுக்கு அப்பால் ,வாழ்வில் வெளிச்சம் உண்டா ?இல்லையா? என்ற அவநம்பிக்கையுடன்ஒன்றல்ல இரண்டல்ல நூறல்ல ................ ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்க்கையின் வரலாற்றை ,வேதனையை மனதிற்குள் புதைத்துக்கொண்டு,
நூற்றாண்டுகளின் தேடல்களை சொப்பின்க் பைகளில் திணித்துக்கொண்டு வசனத்திற்கு வரையறையாக முடியாத உணர்வுகளுடன் தமது இயலாமையின் பயணத்தை தொடாங்கி னார்களே ஞாபகம் இருக்கின்றதா?அப்போது இப்படியானதொரு பேச்சினை ,அறிக்கையை சகோதர சமூகம் விட்டிரிக்கவில்லையே!
அப்படி விரட்டியடிக்கபட்ட சமூகம் ஒன்று வட மாகாணத்தின் பல இடங்களில் வாழ்ந்த சரித்திரங்களை ஆட்சியாளர்களுக்காக,சில அதிகாரிகள் மறைக்க முனைந்தாலும் அவற்றை தடையற அளிக்க முடியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
துரத்தியடிக்கப்பட்டவர்கள் தமது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது யாவரும் அறிந்த விடயம் .தமது சொந்த இடங்களில் அம்மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பொது சில மதகுருக்கள் , சில அரசியல்வாதிகள் ,சில இயக்கங்கள்என் அதனை எதிர்க்கின்றன? இடம்பெயர முன்னர் முஸ்லீம் மக்கள் நட்டுச்சென்ற பலா மரங்கள் அவ்ர்களிஇல்லாத பொது காய்த்தன ,அந்தக்கனிகளை சுவைத்தவர்கள்,அந்த மரங்களும் அவை சார் நிலங்களும் தமக்குச்சொந்தம் என்று நினைத்து அந்த நில புலன்களை அனுபவித்தார்கள்,முறைப்படி குத்தகை கொடுக்க வேண்டும் ,ஆனால் முதலுக்கே இங்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது . அவர்கள் இங்கு கேட்பது குத்தகை யல்ல .எங்களது நிலத்தை மட்டும் தாருங்கள் என்றுதான் கேட்கின்றார்கள் அவர்கள் மேலதிகமாகவும் கேட்கவில்லை ,அல்லாடிக்கொண்டிருக்கின்ற வாழ்க்கைக்கு ஒரு நிலையான பிடிமானத்தையே கேட்கின்றார்கள்.
இதன் நியாயத்தை, இன்று முஸ்லீம் மக்களை ஒரு குழு அவர்களது பல நூற்றாண்டுகால பண்பாட்டினை ,வாழ்வியல் முறைகளை பின்பற்ற தடையாக இருக்கின்றார்கள் என்று குரல் கொடுக்கும் நீங்கள் ,அபலைகளாக இடமின்றித்தவிக்கும் அந்த வடமாகாண முஸ்லீம்களது மீள்குடியேற்ற விடயத்திலும் சார்பாக இருக்க முடியாதா என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.மறப்பது மநித இயல்பு ,மன்னிப்பது தெய்வத்தின் குணங்களிலொன்று.
Sambandan aiya avarhalin maraivitkup pinbuthan namathu samooham avarin puhal padum
ReplyDeleteTHANKS MR.SAMBANTHA.
ReplyDeleteமுஸ்லிம் அமைச்சர்களுக்கு இல்லாத வீரம் சமூக பற்று உங்களிடம் உள்ளது .
30 வருடங்களுக்கும் மேலாகத் துயரக் கடலில் தத்தளிக்கும் தமிழ் சமூகத்தின் விடிவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்கள், பாராளுமன்றத்திலே தமக்கு ஒதுக்கப்படுகின்ற பொன்னான நேரங்களைத் தமிழ் மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல், அந்த அரிய நேரங்களை முஸ்லிம் மக்களின் அவலங்களை எடுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவர்களை நினைத்துப் பெருமையும் நமது தலைவர்களை நினைத்து வெட்கமும் துக்கமும் அடைய வேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம்.
ReplyDeleteதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மிக அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றில் நிலைத்து நிற்கும் என நான் நம்புகிறேன். உணமைதான் இந்த நாட்டில் அடக்கியாளப்படும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசமிக்க உரைக்கு முன்னால், வீணே வேசம் போடுகின்ற நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் துச்சமாகப் போய்விட்டார்கள் வெறும் துரும்பாய், தூசியாய் ஆகி விட்டார்கள்.
திரு.சம்பந்தன் பேசும் போது அஸ்வர் இடையில் குறுக்கிட்டு அவரை பேச விடாமல் தடுக்க முயட்சித்தான்
ReplyDelete