வடகொரியாவுக்கு பிடல் கஸ்ரோவின் உபதேசம்
வடகொரியாவின் அச்சுறுத்தல்களால் கொரிய வளைகுடாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ (86) வடகொரியாவிற்கு நட்பு ரீதியிலான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கியூபா நாட்டின் பத்திரிக்கை ஒன்றில் அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து அவர் எழுதியுள்ளார் அதில் அவர் கூறியிருபதாவது:-
தற்போது கொரிய வளைகுடாவில் நிலவும் சூழ்நிலை நம்ப முடியாததாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. வடகொரியா கியூபாவுடன் எப்போதும் நட்பாகவே இருந்துள்ளது. கியூபாவும் அதனுடன் நட்பை தொடரவே விரும்புகிறது. வடகொரியா அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்கு காண்பித்துவிட்டது. இப்போது வடகொரியா தனது நட்பு நாடுகளுக்கு செய்ய வேண்டிய கடமை பற்றி அதற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது போன்ற போர்கள் உலகின் 70 சதவீத மக்களை மிக மோசமாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதை வடகொரியா மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment