மாத்தளையில் மனித புதைக்குழி ஆணைக்குழுவினை நியமிக்க ஜனாதிபதி உத்தரவு
மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த விசேட ஆணைக்குழுவினை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மாத்தளை வைத்தியசாலைக்கு சுமார் 150 மனித எச்சங்கள் கடந்த வருடம் மீட்கப்பட்டன. இவை ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் கொல்லப்பட்ட தங்களின் உறுப்பினர்கள் என்று ஜே வி பி கூறி வந்த நிலையில், இந்த சடலங்கள் 1980ல் புதைக்கப்பட்டவை என்று அண்மையில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஜே வி பி கோரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் காவற்துறை விசாரணைக்கு மேலதிகமாக, இது தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment