Header Ads

முஸ்லிம்களை எம்மால் தடுத்துநிறுத்த முடியாது - பிரதமர் ஜயரத்னா

(ஜே.எம்.ஹபீஸ்)

நாம் நாட்டுக்காக எதைச் செய்தபோதும் குற்றச்சாட்டுக்களும் விமர் சனங்களுமே எஞ்சியுள்ளன எனப் பிரதமர் கலாநிதி டி.எம். ஜயரத்னா தெரிவித்தார்.

கம்பளை தேசிய மரபுரிமைகள் நிலையத்தில் இடம் பெற்ற கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். சிரேஷ்ட பிரஜைகள் 50 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இன்று வயது 63 ஆகிவிட்டது. அதன் ஆரம்பகால அங்கத்தவர்கள் பலர் பல்வேறு அனுபவங்களையும் பெற்றவர்கள். அவர்களில் சிலர் இன்னும் உள்ளனர். அப்படியானவர்களத அனுபவங்கள் எமக்கு மிக முக்கியம். இங்கு பேசுகின்ற நானும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராகும்.

கம்பளைப் பிரதேசம் சிங்கள,முஸ்லிம், தமிழ் மூவின மக்களினதும் ஒன்றிணைந்த வாழ்விற்கு முன் உதாரணமான ஒரு பிரதேசமாகும். எனவே மொழிப் பயன் பாட்டிலும் நாம் சற்று எமது முன் அனபவங்களைப் பகிர்ந்து கருமமாற்றுவது சாலச் சிறந்தது.

இந்நாட்டு மக்கள் சகலருக்கும் தாம் விரும்பிய சமயத்தை பின்பற்றி அதன்படி வாழ்வதற்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு சிலர் தமது தனிப்பட நலனுக்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இன முறுகளைத் தோற்று விக்க முயன்று வருகின்றனர். இது கவலைக்குறியது. இதனை அனுமதிக்க முடியாது.

இன்று உலகில் முப்பது கோடியே என்பது இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வர்த்தக முயற்சிகள் மூலம் படிப்படியாக உலகில் முன்னேறிய ஒரு சமூகமாகும். எனவே அவர்களது நடவடிக்கையை தடுத்து நிறுத்த எம்மால் முடியாது. அதற்கு எது வித உரிமையும் எமக்கில்லை. இலங்கையின் அபிவிருத்தி தொடாபாக முஸ்லிம் நாடுகளின் பஙகளிப்பை நாம் மறக்க முடியாது. முப்பது வருட யுத்த்ததை முடிவுக்குக் கொண்டு வர உலக முஸ்லிம் நாடுகள் பலவற்றின் உதவியை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பெற்றிருநதமையை நாம் மறந்து விட முடியாது.

ஒரு இனம் மட்டும் இந்த நாட்டில் உயர் நிலையில் இருக்க முடியாது. இந்நாட்டிலுள்ள ஐந்து இனங்களும், ஆறு சமயத்தவர்களும், ஒன்றுபோல் முன்னேறி ஒரேவகையில் தம் பங்களிப்புக்களை வழங்கி சகலரும் ஒரே விதத்தில் வளர்ச்சி அடைந்து காணப்பட வேண்டுமென்றார்.

  • அதாவது, 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் மொத்தமாக 2013.62 Million மக்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. அதாவது, 201 கோடிக்கும் அதிமான தொகையாகும்.

    இந்த லின்கை பாருங்கள் http://www.muslimpopulation.com/World/

9 comments:

  1. கிட்டத்தட்ட 130 கோடி முஸ்லீம்கள் உலகில் வாழ்கிறார்கள்

    ReplyDelete
  2. M.L.A.siraj: Is muslim population is corect

    ReplyDelete
  3. is muslim population is corect

    ReplyDelete
  4. Educated and Experience Leaders do statements and behave like these.

    Sri Lanka is part of World But not World is part of Sri Lanka.

    No society can develop in future by causing disastrous to another society in any land.

    The Creator of all human being, the best of justice, will not leave injustice done by one to another.

    Whole world belongs to the Creator of it, but not to any of us. We all are tenants, one day when the time comes we have leave the place whether we like it or not.

    Let us respect every living and non-living by not violating their right to exist on this earth.

    Peace loving Srilankan Muhammed

    ReplyDelete
  5. ivarukku ulahil 30 koadye 80 letchcham muslimthaan irikkiraam ulahil eththunai muslim irikkirendu theryaatha engada naattu pirathamar ....ithanaippaarunga

    உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம்...............!!

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வரும் பிரபல நாளேடு 'லோசேர் வேடோர் ரோம்மானோ:

    உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றும், உலக கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் அந்த நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன,

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ (L'osservatore Romano) என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக மக்கள் தொகையில் 4ல் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லிம்களும் 24 சதவீதம் கிறிஸ்த்தவர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிறிஸ்த்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது,

    மேற்கண்ட பத்திரிகையின் கருத்துக்கணிப்பு முடிவுகளை தான் மறுக்க வழியில்லாமல், வேறு வழியின்றி போப் ஆண்டவரும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

    அல்ஹம்துலில்லாஹ்...............!!
    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

    ReplyDelete
  6. Ivarukku ulahil eththuna muslim irikkirendu theryaatha engal naattu pirathamar ivarthan...30 koadye 80 letchcham muslimthaan ulahil irikkiraam....

    உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம்...............!!

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வரும் பிரபல நாளேடு 'லோசேர் வேடோர் ரோம்மானோ:

    உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றும், உலக கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் அந்த நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன,

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ (L'osservatore Romano) என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக மக்கள் தொகையில் 4ல் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லிம்களும் 24 சதவீதம் கிறிஸ்த்தவர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிறிஸ்த்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது,

    மேற்கண்ட பத்திரிகையின் கருத்துக்கணிப்பு முடிவுகளை தான் மறுக்க வழியில்லாமல், வேறு வழியின்றி போப் ஆண்டவரும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

    அல்ஹம்துலில்லாஹ்...............!!
    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

    ReplyDelete
  7. முஸ்லிம்களின் எண்ணிக்கை 160 கோடி. அஹ்லுல் சுன்னாஹ் மாத்திரமே (ஷீயாக்கள் தவிர) 120 கோடிக்கு மேல் வரும். நம்மவர்களுக்காக இதைப் பதிய நினைக்கிறேன். நமது தொகை இவ்வாளவாக இருந்தும் உலகில் எங்கு பார்த்தாலும் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறோம். ரசூலுல்லாஹ் சொன்ன விதத்தில் சொல்லப் போனால் "வெள்ளத்தில் அடிபட்டுப் போகும் சருகுகள் போல ஆவீர்கள் "
    கேள்வி : நாம் ஏன் வெள்ளத்தித்தில் அடி படுகிறோம்?
    பதில் : "சருகுகளாக இருக்கிறோம் "
    காரணம் : simple , அதே ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்
    குறிப்பிடுகிறார்கள், 2 காரணங்கள்.
    1. உலக மோகம்
    2. மரணத்தைப் பற்றிய பயம்.
    புறக் காரணங்கள் : (மேற்குறிப்பிட்ட இரு விடயங்களால்) அவர்கள்
    உள்ளத்தில் முஸ்லிம் என்ற பயத்தை அல்லாஹ்
    எடுத்துவிடுவான் என்றும் கூறினார்கள்.
    தீர்வு : அதுவும் simple. சருகுகள் என்ற நிலையில் இருந்து ஈடுகொடுக்கும் நிலைக்கு மாற அதே இரு விடயங்களான உலக மோகம்
    மற்றும் மரண பயத்தை விட்டு விட வேண்டும்.

    அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பி, உயிரோட்டமுள்ள சமுதாயமாய் மறுமைக்காக உழைப்போம்.

    ReplyDelete
  8. Ivarukku muslimgal ulahil eththuna per irikkirendu kooda theryatha engal naattu pirathamar..
    இன்று உலகில் முப்பது கோடியே என்பது இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.
    .....உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம்...............!!

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வரும் பிரபல நாளேடு 'லோசேர் வேடோர் ரோம்மானோ:

    உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றும், உலக கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் அந்த நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன,

    கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ (L'osservatore Romano) என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக மக்கள் தொகையில் 4ல் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லிம்களும் 24 சதவீதம் கிறிஸ்த்தவர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிறிஸ்த்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது,

    ReplyDelete

Powered by Blogger.