Header Ads



இஸ்ரேலின் ஆயுத கப்பலை எகிப்து கைப்பற்றியது


(TH) இஸ்ரேலின் துறைமுகத்திலிருந்து ஆயுதம் ஏத்திச்சென்ற கப்பல் எகிப்தின் எல்லைக்குள் வந்ததால் அந்நாட்டின் கப்பற்படை அதனைக் கைப்பற்றியுள்ளது, என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வியாழன் அன்று கப்பல் ஒன்று இஸ்ரேலின் துறைமுகமான எயலட்டிலிருந்து டோகோவிற்கு ஆயுதங்களை ஏற்றிச்சென்றது. அதில் ஆப்ரிக்க நாடு ஒன்றின் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அது எகிப்தின் கடல் எல்லைக்குள் மிதந்துக்கொண்டு இருந்ததால் அந்நாட்டு கடற்படை அதனை கைப்பற்றியுள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து 105 பெட்டிகளில் பெயர் குறிப்பிடப்படாத ஆயுதங்கள் இருந்தது. அதனை எகிப்தின் ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் அந்தக் கப்பலில் பணிபுரிந்த 14 நபர்களையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது திருடிவரப்பட்ட ஆயுதமா என்றும் விசாரணை நடந்துவருகிறது.

2 comments:

  1. this is a fox-trick of Israeli to launch another plan and to divert the world eyes.

    ReplyDelete
  2. He may come capture these arms tomorrow So take care brotherhoods brothers

    ReplyDelete

Powered by Blogger.