பொதுபல சேனாவை ஏதிர்த்து, மொபிடெல்லை பகிஸ்கரி - காத்தான்குடியில் துண்டுபிரசுரம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பொதுபலசேனாவை ஏதிர்ப்போம்-மொபிடெல்லை பகிஸ்கரிப்போம் எனும் தலைப்பில் காத்தான்குடி நீதிக்கான மக்கள் குரல் இயக்கத்தினால் இரண்டு பக்கத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்று காத்தான்குடியில் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வறுமாறு,
பொதுபலசேனாவை ஏதிர்ப்போம்-பொபிடெல்லை பகிஸ்கரிப்போம்
அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளை
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதஅமைப்புக்கள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். ஹலாலுக்கு எதிராக போராட்டத்தைதொடங்கிய அவர்கள் இப்போது நமது சகோதரிகளின்அபாயாக்களை கழற்றி வீசப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.பல இடங்களில் அபாயாக்களை கழற்றுமாறும் முஸ்லிம் பெண்களைஅச்சுறுத்தியிருக்கிறார்கள்.
கடைசியாக முஸ்லிம்களின் வர்த்தகங்களை முடக்கும் வகையில் தாக்குதல் நடவடிக்கைகளைஆரம்பித்துள்ளார்கள். அதன் முதல்கட்டமாகவே கொழும்பில் பெசன் பக் நிறுவனத்தை தாக்கி சேதப்படுத்தியிருக்கிறார்கள்.நாளுக்கு நாள் இந்த பௌத்த இனவாத சக்திகளின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்
திகரித்த வண்ணமே செல்கின்றன. நமது முஸ்லிம் தலைமைகளோ இதுபற்றி உரியநடவடிக்கைகளை எடுக்காது மௌனம் சாதிக்கின்றன.
முஸ்லிம்களாகிய நாமும் இந்தத் தருணத்தில் நம்மால் இயன்ற அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளைமுன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். கடந்த 25.03.2013 அன்று நமது பகுதிகளில் இடம்பெற்றஹர்த்தால் பெரும் வெற்றியளித்துள்ளது. தயட கிருளவை நமது சகோதரசகோதரிகள் பகிஸ்கரித்தமையானது அரசாங்கத்திற்கும் பௌத்த இனவாதிகளுக்கும் பலத்த அடியாகும்.
அந்தவகையில் தற்போது தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான மொபிடெல்முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனா அமைப்புக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம்ஒன்றை ஆரம்பித்துள்ளது. மொபிடெல் மூலம் பொது பல சேனாவின் பாடலை ரிங் டோனாகபயன்படுத்துபவர்களிடமிருந்து மாதம் 30 ரூபா அறவிட்டு பொது பல சேனாவுக்கு வழங்கும் திட்டமேஅதுவாகும். அதற்கமைய இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.அதன்மூலம் பொது பல சேனாவுக்கு மொபிடெல் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வழங்குகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு நமது பள்ளிகளைத் தாக்கி நமது குர்ஆனை இழிவுபடுத்தி நமதுஹலாலை இல்லாதொழித்து நமது சகோதரிகளின் மானத்தில் கைவைக்கும் பொது பல சேனாவுக்குநாமே நம்மை அறியாமால் நிதி வழங்கலாமா?
நாட்டின் தேசிய நிறுவனமான மொபிடெல் இவ்வாறு இனவாதத்தை கக்கி முஸ்லிம்களை இழிவுபடுத்தும்ஒரு அமைப்புக்கு நிதி வழங்குவது எந்தவகையில் நியாயம்? இதறகு; முஸ்லிம்களாகிய நாமும்துணைபோகலாமா?எனவே பொதுபல சோனவுக்கு நிதிவழங்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக மொபிடெல் நிறுத்தவேண்டும். அத்துடன் பொது பல சேனாவுக்கு ஒரு ரூபாவைக் கூட மொபிடெல் வழங்கக் கூடாது. பொது பல சேனாவுக்கு துணை போனமைக்காக முஸ்லிம்களிடம் மொபிடெல் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும். இதன் பின்னர் இவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என மொபிடெல்உறுதிமொழி வழங்க வேண்டும்.எனவேதான்
மொபிடெல்லுக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களது வியாபாரநடவடிக்கையில் சரிவை ஏற்படுத்தும் வகையிலும் மொபிடெல் பாவனையாளர்கள் அனைவரும் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
• மொபிடெலிலிருந்து வெளிச் செல்லும் அழைப்புக்கள் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள். வெளிச் செல்லும் அழைப்பு மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபா வீதம் நீங்கள் மொபிடெல் நிறுவனத்திற்கு வழங்குகிறீர்கள்.
• நியூஸ் அலேர்ட், எம் டியூன்ஸ், ஜீ.பீ.ஆர்.எஸ் (இன்ர்நெட்) போன்ற சேவைகளைப் பெறுவதிலிருந்தும் பயன்படுத்துவதிலிருந்தும் முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள்
• வெளிநாடுகளுக்கான அழைப்புகளை (ஐனுனு) மேற்கொள்ளுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்
• மொபிடெல் மூலமாக ஈ சனலிங், ரயில்வே டிக்கட் புக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளாதீர்கள்.
• மொபிடெல் கார்ட், ரீலோட் வழங்கும் வர்த்தக நிலையங்கள் அதிலிருந்து உடனடியாக விலகிக் கொள்ளுங்கள்.
• புதிதாக மொபிடெல் சிம் விற்பதையோ வாங்குவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• உங்கள் கடைகளில் இருக்கும் மொபிடெல் விளம்பரப் பலகைகள,; பதாகைகள், ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்றுங்கள்.
• முஸ்லிம்களின் விசேட தினங்கள், மாதங்களில் மொபிடெல் வழங்கும் ரோமிங் சேவைகளையோ வேறு எந்த சலுகைகளையோ பெற்றுக் கொள்ளாதீர்கள்
• மொபிடெல் சிம்களை ஹஜ்ஜுக்கோ உம்றாவுக்கோ கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
• மொத்தமாக மொபிடெல்லை புறக்கணிக்கும் வகையில் மொபிடெல் உடனான சகலதொடர்புகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• உங்கள் வீட்டிலோ, குடும்பத்திலோ, அலுவலகத்திலோ எவரேனும ; மொபிடெல் சிம் பயன்படுத்தினால் அவர்களுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்துங்கள்.
• மொபிடெல் பெக்கேஜ் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பினால் உடனடியாக மொபிடெல் அலுவலகத்திற்குச் சென்றோ அல்லது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியோ உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் மொபிடெல்
நிறுவனத்திற்கு அறிவிக்காது பெக்கேஜ் சேவையை இடைநிறுத்தினால் மாதாந்த வாடகைகள் சேர்ந்து பின்னர் கூடுதலான கட்டணத்தைச் செலுத்த வேண்டி வரலாம்.
• இணையதள பாவனைக்கு மொபிடெல் சிம் பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• பேஸ்புக்கில் நீங்கள் மொபிடெல்லை லைக் செயதிருந்தால் உடனடியாக அதிலிருந்து வெளியேறுங்கள். அத்துடன் வேறு எந்த சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நீங்கள் மொபிடெல்லை பின்தொடர வேண்டாம்.
• உபஹார பாவனையாளர்கள் முடியுமானளவு அதனைப் பயன்படுத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
• மொபிடெல் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம்களே உடனடியாக அந்த நிறுவனத்திலிருந்து விலகுவதன் மூலம் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள் என அவ் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏதிர்ப்போம்-மொபிடெல்லை பகிஸ்கரிப்போம்
ReplyDeleteHere the opportunity to test our unity and strength... we been saying this for boycott Zionist products world wide, now time to implement in our motherland.
ReplyDeleteLets give a try.....
Boycott MOBITEL
AM ALREADY DISCONNECTED FROM ALL MOBITEL SERVICES, INCLUDING MY INTERNET, POST PAID GSM
முதலாவதாக காத்தான்குடியில் இருக்கின்ற மொபிடேல் tower ஐ அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
ReplyDelete