காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன் மரம் முறிந்து போக்குவரத்துத் தடை - மக்கள் அவதி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் இன்று திங்கட்கிழமை இரவு 08.15மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்திலிருந்த மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு மக்கள் போக்குவரத்திற்காக மாற்று வழிகளை பயன்படுத்துகின்றனர்.
வைத்தியசாலைக்கு முன்னால் மரம் விழுந்துள்ள இடத்திற்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்று உள்ளதுடன் மின்சார வயர்களுடன் பட்ட நிலையிலேயே மரம் சரிந்து விழுந்துள்ளது.
ஏலவே குறித்த காணியின் பின்பக்கம் மரமொன்று முறிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment