Header Ads



சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளரே..!



(அன்சார்)

சம்மாந்துறை வலயத்திற்கு உட்பட்ட சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஜிட்புரம் என்ற கிராமத்தில் 1966 ம் ஆண்டில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் பாடசாலையான மஜிட்புர வித்தியாலயத்தில் இதுவரை உயர்தர கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை என மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

க.பொ.த சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடையும் மாணவர்கள் தங்களது உயர்கற்கை நெறிகளை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்த போதும் அந்தப் பாடசாலையில் உயர்கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படாததினால் மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்

அதனால் மாணவர்கள் இளவயதிலேயே திருமணம் முடிக்கும் நிலைக்கும் ஆளாக்கப்பட்டு அவர்களது கல்வியும் பாலாக்கப்டுகிறது.

சில ஆண் மாணவர்கள் சைக்கில்கள் மூலம் சம்மாந்துறைக்குச் சென்று உயர்தர கற்கைநெறியைக் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் பெண் மாணவிகள் எங்கனம் இவ்வாறு சம்மாந்துறைக்குச் சென்று கல்வி கற்க முடியும்....???? அவ்வாறு சம்மாந்துறைக்குச் சென்று தங்கள் உயர்கற்கை நெறிகளை மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

அந்தப்பாடசாலையில் உயர்கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று கருதும் பட்சத்தில் அவர்கள் சம்மாந்துறைக்குச் சென்று கல்வி கற்பதற்கான போக்குவரத்துச் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலையாய கடமை அல்லவா....????

 முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்னடைந்து இருக்கிறது என்று நாமே கூறிக் கொள்கிறோம் அதற்கான காரணியாக நாமே இருந்துவிட்டு. இவ்வாறு சிறு சிறு கிராமங்களில் காணப்படும் கல்வியின் வீழ்ச்சிதான் எம் சமூதாயத்தில் பாரிய கல்விப் பிண்ணடைவுக்கு காரணமாகும்.

ஆகவே சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரி எம்.கே.எம் மன்சூர் அவர்களே..!! மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் திரு. நௌசாட் அவர்களே..!!! இந்த விடயம் தொடர்பாக உங்களது அதி உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.