இலங்கையின் ஏற்றுமதியில் வீழ்ச்சி - ஹலால் நெருக்கடியும் காரணமா..?
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 12 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
இது மகிந்த சிந்தனையின் இலக்குகளை அடைவதற்கு முக்கியமான தடைக்கல்லாக அமைந்துள்ளது என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பதில் தலைவரும், நிறைவேற்றுப் பணிப்பாளருமான யூசுப் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இது கொஞ்சம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அவற்றில் சில ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்துலக சந்தையில் நிலவிய பின்னடைவு, ,குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கடுமையான போட்டி இன்னொரு காரணம்.
கடந்த ஆண்டில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பின் பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள பொருளாதாரத் தடையினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவு பாதிப்பை சந்தித்துள்ளது.
மகிந்த சிந்தனையின் படி 2015ம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி 15 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர் ஏற்றுமதியை இலங்கை லக்காக நிர்ணயித்துள்ளது.
ஆனால் முதலிரு மாதங்களில் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வீழ்ச்சி இந்த இலக்கை அடைவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள ஹலால் நெருக்கடியும் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியில் செல்வாக்கு செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துவரும் மாதங்களில் இதுபற்றிய தெளிவான அறிக்கைகள் வெளியாகுமெனவும் நம்பப்படுகிறது.

Ok very good result recorded in EDB
ReplyDeleteSo Mahinda..... stop and band the BBS immediately and its activities and you may some time loose supports of Gulf countries in future. dear Mahinda....h.