Header Ads



முஸ்லிம்களின் ஏற்பாட்டில் சர்வமத நல்லிணக்கத்திற்காக மாபெரும் இரத்த தான முகாம்


சர்வ மத நல்லிணக்கத்தையும்- சமூக ஒருமைபாட்டையும்  முன்னிட்டு 'தெஹிவளை முவர்ஸ் நலன்புரி சங்கம்" மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்த தான முகாம்  எதிர்வரும் 7ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணிமுதல் மாலை 3.00மணிவரை நடைபெறவுள்ளது.

தெஹிவளை முவர்ஸ் வீதியிலுள்ள மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெறும் இந்த இரத்த தான முகாமில் முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சகல இன மக்களளும் எவ்வித பேதமுமின்றி கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்யவுள்ளதாக இச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

நாடளாவிய ரீதியில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும்   பல்லாயிரக்கணக்கான நோயாளிகளின் நன்மை கருதி  இரத்த தானம் செய்து இந்த புண்ணிய கைங்கரியத்துக்கு ஒத்துழைக்குமாறு இச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

No comments

Powered by Blogger.