Header Ads



'எமது அரசியல் தலைமை காற்றில் ஆடும் துரும்பாக இருக்க முடியாது' - ஹஸன்அலி



(இப்னு செய்யத்)

எமது அரசியல் தலைமை காற்றில் ஆடும் துரும்பாக இருக்க முடியாது. இன்று அத்திவாரமின்றி இருப்பதாகவே உள்ளது. பெரும்பான்மையினர் இந்த அரசியல் தலைமையையும், அரசியல் அதிகாரத்தையும் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இருந்து எமது மண்ணை மீட்டு எடுக்க வேண்டும். எங்களின் கலை கலாசாரத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். ஆதலால், இவற்றை அடைவதற்கு எங்களின் அரசியலின் ஸ்திரத்தன்மையை கட்டி எழுப்ப வேண்டும்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று (06.04.2013) மாலை நடைபெற்ற  மௌலவியா முகம்மட் ஸாஹிராபானு எழுதிய குழந்தைகளுக்கான அறபுமொழி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ரீ.நஹீல் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

அறபு மொழியை இலகுவாகக் கற்றுக் கொள்ளகூடிய இந்நூலினை நாங்கள் இங்கு வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது, இதனை வைத்துக் கொண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏதோ சதி செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகின்ற ஒரு குழுவினர் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எங்களின் குர்ஆன் அமைந்துள்ள அறபு மொழியும், முஸ்லிம் பெண்களின் ஆடையும், உலமாக்களின் கண்ணியமும் கௌரவத்திற்கு குறைவானதொரு விடயமாக ஒரு குழுவினரால் பார்க்கப்பட்டு வருகின்றன. இவர்கள் உலகில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்ற சூழலில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இதற்கு காரணம், கிழக்கு மண்ணிலே எங்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்து நிற்பதாகும். 1931ஆம் ஆண்டு வாக்குரிமை அங்கிகரிக்கப்பட்ட போது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் தேசிய கவுன்லராக சேர் முகம்மட் மாக்கான் மரைக்கார் கிழக்கு மண்ணில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டார். ஆகவே, முழு நாட்டுக்குமான அரசியல் தலைமையைக் கொடுத்த பெருமை இந்த கிழக்கு மண்ணுக்குத்தான் இருக்கின்றது. அன்று முதல் இன்று வரை கிழக்கு மண்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துத்தை கொடுத்து வருகின்றது.

அந்த அரசியல் தலைமை காற்றில் ஆடும் துரும்பாக இருக்க முடியாது. இன்று அத்திவாரமின்றி இருப்பதாகவே உள்ளது. பெரும்பான்மையினர் இந்த அரசியல் தலைமையையும், அரசியல் அதிகாரத்தையும் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இருந்து எமது மண்மை மீட்டு எடுக்க வேண்டும். எங்களின் கலை கலாசாரத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். ஆதலால், இவற்றை அடைவதற்கு எங்களின் அரசியலின் ஸ்திரத்தன்மையை கட்டி எழுப்ப வேண்டும்.

இந்த நாட்டு அரசாங்கம் இன்னும் 18 மாதங்களுக்குள் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்த இருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. ஆதலால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களின் வேற்றுமைகளை மறந்து முஸ்லிம் சமூகத்திற்காக ஒற்றுமைப்படுதல் வேண்டும். எவ்வாறு ஹலால் விடயத்தில் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டோமோ அதே போன்று ஒற்றுமைபட்டால்தான் எங்களுக்குரியவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒற்றுமைப்படாது போனால் எங்களின் தனித்துவங்கள், அடையாளங்கள் எல்லாவற்றையும் இழக்க வேண்டி நேரிடும்.

 முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமென்று நிரூபித்துள்ளது. இதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாவும் ஒற்றுமையுடன் செயற்படல் வேண்டும் என்றார்.

3 comments:

  1. ஆரம்பத்தில் இருந்தே தலைமை மிகவும் பலகினமாகவும், தனது தலைமைத்துவத்துக்கு ஒரு அச்சுருத்தல் வந்து விடக்கூடாது என்பதற்காக திறமை உள்ளவர்களை ஓரம் கட்டி (முனாபிக் தனமாக) சுயநல அரசியலையே முன்னெடுத்து செல்கின்றது இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

    ஆனால் உங்களது தற்போதைய நிலைப்பாடு, சமூகத்தின் நலத்துக்காகவா? அல்லது உங்களின் சுயனலத்துக்காகவா? என்பது புரியவில்லை. இருந்தாலும் நீங்கள் கூருவது முற்றிலும் உண்மை...!!! நிட்சயமாக ஒரு மாற்றுத்தலைமை மிக மிக அவசியம். மாமா வேலை பார்க்கும் பசீர் சேகு தாவுத்திடம் இருந்து இந்தகட்சியை பாதுகாப்பது எல்லோரினதும் தலையாய கடமையாகும்.

    ReplyDelete
  2. இவரது பேச்சில் ஒரு மர்மம் தெரிகிறது முஸ்லீம்களுக்கான தலைமை கிழக்குக்குத்தான் தேவை என்பதை மறைமுகமாக சாடுகிறார் தொடரவும் றவுப் ஹகீம் இந்த சமூகத்துக்கு பெற்றுத்தந்த உரிமைகள் என்ன? செய்த சேவைதான் என்ன தனது சுய இலாபத்துக்காக ரணிலுடன் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து அப்பாவி முஸ்லீம்கலளை பொன்சேக்காவுக்கு வாக்களிக்கவைத்து அரசின் விரோதத்துக்குரியவர்களாக முஸ்லீம்களை பலியாக்கி நோர்வை போன்றவர்களிடம் ப்ந்தம் பெற்று தன்னை வளர்த்தது மட்டும்தான் உண்மை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு சமூகத்தலைவன் என்று 100 ரூபாவாவது சொந்த பணத்தில் யாருக்காவது கொடுத்திருப்பாரா இப்படியான ஒருவர் நமக்கு தலைவராக வேண்டாம்.

    ReplyDelete
  3. சகோதரர் ஹசன் அலி அவர்களே உங்கள் தலைமைத்துவம் காற்றில் ஆடுல் புல் அல்ல காற்றில் பறக்கும் பஞ்சாக எப்போதே மாறிவிட்டது, முனாபிக் தனமாக முஸ்லிம்களிடம் அரசாங்கத்தை ஏசி,பேசி, திட்டிதீர்த்து வாக்கை பெற்றபின் செய்த துரோகம் இன்னும் மக்களுக்கு நன்கு ஞாபகம் உள்ளது, இப்போதும் முடிந்தால் கிழக்கில் ஆட்சியை மாற்றிக்காட்டுங்கள், செப்டெம்பரில் தமிழர் கூட்டமைப்பு மாவை சேனாதிராஜா தலைமையில் வடக்கில் ஆட்சி அமைக்கப்போகிறது இந்தநேரத்திலாவது உங்கள் பலமான எதிர்ப்பை அரசாங்கத்திடம் காட்டாமல் சொந்தஊரில் மாத்திரம் வீர வசனம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது ஒரு வாசு தேவ நானயக்கரவுக்கு இருக்கும் உணர்ச்சியும் மன உறுதியும் ஏன் உங்களிடம் இல்லாது பொய் விட்டது,எனது பார்வையும் SLMC யில் உள்ள ஒரே ஒரு கட்சியின் உண்மை விசுவாசி நீங்கள் மாத்திரம்தான் நீங்கள் நினைக்கவேண்டாம் ஹகீம் தலைமையிலான கட்சி இல்லை என்றால் முஸ்லிம்கள் அரசியலில் அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்று இந்தியாவில் ராஜெவ் காந்தியும், இலங்கையில் பிரேமதாசவும், ஏன் நமது தலைவரும் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரிந்த பின்னும் இந்த நாடும் மக்களும் அழிந்துவிடவில்லை மாறாக குரங்கில் கையில் பூமாலையை கொடுத்ததுபோல் உங்கள் தலைவர், நெஞ்சில் உறுதியான ஈமான் இல்லாத காரணத்தால் இன்று முஸ்லிம் சமூகத்தை நாடு ஆற்றில் இறக்கிவிட்டுள்ளார் அத்தனையும் தெரிந்திருந்தும் எதுவும் அறியாதவர் போல் பத்திரிகைக்கும் ஊர் மக்களிடமும் வீர வசனம் பேசியது ,போதும் நீங்கள் உங்கள் இரட்சகராக கருதும் இந்நாட்டு தலைவரிடம் பேசி முடிவிற்கு வாருங்கள்! இதுவியத்தில் இறைவனை பயந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.