Header Ads



'ஒரு முழம் தைய்க்க, ஏழு முழம் கிழிகின்றது'


(சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான நஸார் ஹாஜி விடுத்துள்ள அறிக்கை)

தேசிய ஒருமைப்பாட்டிற்காக காலாகாலமாக  தங்களின் முழு ஆதரவையும் அர்ப்பணிப்பையும் கொடுத்துவரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம்களின்   வாழ்வியலுக்கு இன்று ஏற்பட்டுள்ள இடையூறு யாரும் எதிர்ப்பார்த்திராத ஒன்று என்று எவரும் கூற முடியாது. இவ்வாறான ஒரு காலக்கட்டம் கருக்கட்டலாம் என்று ஒரு முஸ்லீம் தலைமைத்துவம் இன்றைக்கு கால் நூற்றாண்டிற்கு முன்பே எதிர்வு கூறியிருந்தது. அதற்காக இந்நாட்டு முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றுப்பட்ட ஓர் அணியின் கீழ் வந்து சேருங்கள் என்றும் அத்தலைமைத்துவம் விடுத்திருந்த அழைப்பையும் யாரும் மறந்து விடவும் கூடாது.

  உங்கள் மீது அனுமதிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள், ஆடையை அணியுங்கள்  என்றெல்லாம் முஸ்லீம்கள் மீது அவர்களைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல இறைவன் என்று முஸ்லீம்கள் நம்பும் அல்லாஹ் இட்ட கட்டளைகளை. இதை அவர்கள் உயிர் உள்ள வரை  கடைப்பிடிப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் விளங்கியாக வேண்டும். இக்கட்டளையை பேணி நடக்கும் உரிமையை வேண்டி சர்வதேச மனித உரிமைப் பேரவைக்கு முறைப்பாடு செய்பவர்கள் அல்ல முஸ்லீம்கள். மாறாக அந்த உத்தரவாதம் இல்லாத உணவை உண்பதிலும், உடையை அணிவதிலும்   பார்க்க மரணித்து போவதிலேயே சுவனம் உண்டு என்று நம்புகிறார்கள்.

 முஸ்லீம்களை அவமதிப்பவர்கள் யார் என்பதையும் அவர்கள் அறியாமலுமில்லை  என்றாலும், ஆகக்குறைந்தது இந்நாட்டு பிரஜைகள் என்கின்ற அடிப்படையில் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லீம்களின் வாழ்வியலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து  நாட்டின் அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது, அவர்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அவலாய் உள்ளனர்.

   இந்த அசாதாரண நிலைக்குப்பின்னால், ஒரு அரசியல் பிண்ணணி இருக்குமோ? இல்லையோ என்றெல்லாம் சந்தேகங்கள் பரவலாக பேசப்படுகிறன. இந்நிலையில், முஸ்லீம்களின் தனித்துவத்திற்கான ஒரு தேசிய கட்சியும், அந்திம காலத்தின் அக்கட்சி பல துண்டுகளாக பிளக்கப்பட்டு அதன் ஊடாகவே முஸ்லீம் சமூகத்திற்கு கிடைத்த நல்ல வாய்ப்புகள் என்று சொல்லப்படும் பல துறைகளைக் கொண்ட அமைச்சர்களும், தற்போது முஸ்லீம்களின் வாழ்வியலுக்கு ஏற்ப்பட்டுள்ள  இடையூறுகளைச் சீர்ப்படுத்த என்ன செய்யப்போகிறார்கள்? என்ன செய்ய முடியும்? என்றும் முஸ்லீம்கள் கவலையுடன் சிந்திக்கின்றனர்.
  ஓன்றுப்பட்ட இலங்கைக்குள் முஸ்லீம்களின் தனிததுவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக 'ஓரத்தில் நின்றுக்கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை, போராளிகளே புறப்படுங்கள்'  என்று அன்றைய ஒரு தலைமைத்துவம் உரத்து ஒலியெழுப்பியதையும், அப்பாதையில் தன் உயிரையே அர்ப்பணித்ததையும் முஸ்லீம் மக்கள் மறந்து விட கூடாது. அனைத்து முஸ்லீம் பிரதிநிதித்துவங்களும் ஒன்றுப்பட்டு ஒரு குரலாக ஒலிப்பதன் மூலம் தான்  எமது தனித்துவத்தைப் பாதுகாக்க முடியும்  என்றால்,அதற்கான நடவடிக்கைகளை முஸ்லீம் மக்கள்தான் செய்ய வேண்டும். காரணம் பல்வேறுப்பட்ட தலைமைத்துவத்திற்கும் அவற்றை உருவாக்கத்திற்கும் பின்னால் நின்றவர்கள் மக்கள்தான்.

  இதுதவிர அமைச்சர்களாக இருந்ததனால்தான் ஏராளமான அபிவிருத்திகளைக் கொண்டு வர முடிந்ததென்று முஸ்லீம் தலைமைத்துவங்களும் பிரதிநிதிகளும் கூறுவார்களேயானால், அதற்கான விலை முஸ்லீம் சமூகத்தின்  தனித்துவத்தை இழந்து நிற்பதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அபிவிருத்தி என்றும் தொழில் வாய்ப்புகள் என்றெல்லாம் இவர்கள் இன்னமும் கொக்கரித்துக்கொண்டும்  கூப்பாடு போட்டுpக்கொண்டும் காலத்தை வீனடித்துக்கொண்டிருக்க முடியாது.

வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்றெல்லாம் செய்து வந்தவைகள் அனைத்தும் ஒரு பிரதேசமும், ஒரு குறிப்பிட்ட  வட்டாரங்களும் சார்ந்த விடயமே தவிர, இன்று ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் பயன் பெறுகின்ற அல்லது பாதிக்கப்படுகின்ற இக்கட்டத்தில் இவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அவசரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டியுள்ளது.

  நாட்டை நேசிக்கும் ஒரு சமூதாயத்தை உருவாக்கும் பணியில் அனைத்து உலகமும் செயற்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், அவ்வப்போது சிறு சிறு குழுக்கள், இயக்கங்கள் தோன்றி  ஏனைய சமூகங்களை அவமதிப்பதும்,அவர்களின் உணர்வுகளை காலால் மிதிப்பதும், எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. தர்மத்தை இந்த உலகிற்கு போதிக்கும் ஒரு பெரும் கோட்பாட்டை கற்று அதில் மதகுரு பட்டமும் பெற்றுவிட்டு, இறுதியாக நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நாசகார செயல்களில் ஈடுபடுவதையும் இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது. இக் குழுக்களுக்கு பதிலாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு நாட்டை நேசிக்கும் ஒரு சமூதாயத்தை உருவாக்க அயராது பாடுப்பட்டு வரும் இந் நாட்டு அரசிற்கு உள்ளது.

  இது தவிர, ஓர் இறை கொள்கையைக் கற்று அதை வலுவாக ஈமான் கொண்டுள்ள முஸ்லீம் சமூகத்தின் தலைவர்களான உலமாக்கள்,இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்படுகின்ற நெருக்குவாரங்களுக்கு இஸ்லாத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு முடிவுக்கட்டி செயற்பட வேண்டும். அல்லாஹ்வின் திருநாமங்களின் ஒன்று பாதுகாப்பு அளிப்பவன் பாதுகாப்பை வேண்டியும்  அல்லாஹ்வைத் தவிர வேறு நாயணை வணங்கக் கூடாது. என்று ஓதி மணனமும் செய்து விட்டு, பாதுகாப்பை நாடி ஹூனூத் ஓதி அல்லாஹ்வை வணங்காதீர்கள். என்று  இஸ்லாமியத் தலைவர்கன் கூறினால் அர்த்தம்தான் என்ன உங்களை விடுத்து முஸ்லீம் சமூகத்தை வழிக்காட்ட வேறு யாரிடமும் போகச்சொல்கிறீர்கள். எந்த மதத்தை பின்பற்றச் சொல்கிறீர்கள் என்று நாம் கேட்கின்றோம். அப்படி கூற வேண்டிய நிலைப்பாடும்  அழுத்தங்களும் இருக்குமாகயிருந்தால் பகிரங்கமாக கூறுவதையிட்டு பக்குவமாக ஜும்மா பிரசங்கங்களின் போது முஸ்லீம்களுக்கு எடுத்து கூறுவதுதான் தற்போதைய நிலைமைக்கு சரியென எனது தனிப்பட்ட கருத்தாகும்.

 ஆகவே தற்போது இந்நாட்டின் ஜனதிபதி ஒரு முழ சீலையை தைய்க்க நினைக்கின்ற போது இன வாதிகள் ஏழு முழ சீலையை கிழிக்கின்ற நிலைப்பாட்டை காண்கின்றோம். இந்த நிலைமை இந்த நாட்டின் ஒற்றுமையின் சமநிலையை குழப்புகின்ற செயலாகவே நோக்கவேண்டியிருக்கினறது.

 இனிமேலும் வாய்ப்பார்த்துக்கொண்டிருக்காமல் காலத்தின் தேவைகளை உணர்ந்து இந்த சமூகத்தினரையும் அடுத்து வருகின்ற சந்ததினரையும் பாதுகாக்க வேண்டிய உரிமையும் கடமையும் ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லீம்களாகிய தலைமைத்துவங்களும், உலமாக்களும் கல்விமான்களும் புத்திஜுவிகளும் எழுத்தாளர்களும் பல்கலைகழக மாணவர்களும் ஈமானுடன் இந்த மார்க்கத்தினையும் மதத்தினையும் நல்லதொரு சமூகத்தினைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டும். என்று அன்பான அழைப்பினை விடுக்கின்றார் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின்  அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பாளரும் அதி உயர்பீட உறுப்பினருமாகிய நஸார் ஹாஜி.             

4 comments:

  1. நசார் ஹாஜியாருக்கு நன்றி ,

    ReplyDelete
  2. சுபஹானல்லாஹ்.

    உங்கட அறிக்கையை பார்த்தால் வுளு செய்து எழுதினாப்போல உள்ளது.

    சார் உங்களுக்கு ஒரு சட்டவிரோத சிகரட் விற்ற மொத்த வியாபாரியை தெரியுமா?

    நம்மட கிழக்கு மக்கள் தானே உலகத்திலேயே பெரிய பலாப்பழங்கள் என்று உங்களுக்கு நல்ல விளங்கிட்டு போல. ஆஆஹா பள்ளித் தலைவர் பதவிக்கு ட்ரை பன்னுறீன்களோ?

    மக்களே! அண்டப் புளுகன்களையும், ஆகாச புளுகன்களையும் பார்ப்பெதேன்றால் நம் முஸ்லிம் கட்சிகளையும் அதன் கூஜா தூக்கிகளையும் பார்த்தால் புரியும்.

    அடே ... இப்பதான் விளங்குது நாட்டில் எவ்வளவோ பிரச்சினை நடக்கும் போது மஹிந்த கூலாக கிழிந்த சீலை தைக்கும் டைலர் வேலை பார்கிறார் என்று.

    ReplyDelete
  3. நாசர் ஹாஜி, கடைசியா என்னதான் சொல்ல வாறீங்க? ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் ஒரு நீளக்கட்டுரை !!!, இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள் என்று கேட்கத்தூண்டுகிறது. இன்று நாட்டில் பொது பல சேனாவின் இயக்கம் என்பது சிங்கள சமுகத்திலுள்ளவர்களினாலேயே பலவீனப்படுத்தப்படும் நிலை தோண்றிவிட்டதென்பது பெரும்பான்மை மொழிப்பத்திரிகைகள் முலம் வெளிவரத் தொடங்கி விட்டது. இப்போதுதான் உங்களைக் காண முடிகிறது நன்றி இப்பொழுதாவது கருத்து சொல்லவந்தீர்களே என்று. ஆம் "இந்த மார்க்கத்தினையும் மதத்தினையும் நல்லதொரு சமூகத்தினைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டும். என்று அன்பான அழைப்பினை விடுக்கும் நீங்கள், " “பாதுகாப்பை நாடி குனூத் ஓதி அல்லாஹ்வை வணங்காதீர்கள். என்று இஸ்லாமியத் தலைவர்கன் கூறினால் அர்த்தம்தான் என்ன உங்களை விடுத்து முஸ்லீம் சமூகத்தை வழிக்காட்ட வேறு யாரிடமும் போகச்சொல்கிறீர்கள்." என்று அப்பாவித்தனமான கேள்வியை தொக்கவிட்டுள்ளீர்களே ஏன்? " பாதுகாப்பை நாடி குனூத் அந் நாசிலாவை ஓதி வாருங்கள் என்ற போது உலமா சபைக்கு கட்டுப்பட்டீர்கள். ஆனால் குனூத் அந் நாசிலாவை ஓதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தபோது மட்டும்,(நீங்கள் மட்டுமல்ல) சமுகத்தில் ஆங்காங்கே சில சலசலப்புகள், இப்போது முஸ்லிம்களின் நிலை என்ன மேம்பட்டு விட்டதா ஏன் நிறுத்த வேண்டும் என்று கேள்வி வேறு. முதலில் நம் தலைமைத்துவத்திற்கு ( ஜம்யிய்யதுல் உலமாவுக்கு) விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு கட்டுப்படுவோம். அவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமாக செல்லமாட்டார்கள் என்று முழுவதுமாய் நம்புவோம். பின்னர் நமது அபிப்பிராயம் என்னவென்று கூறுவோம். குனூத் அந்நாஸிலா என்பது இக்கட்டான நிலை நீங்கும் வரை தொடரவேண்டும் என்பதல்ல, அவ்விக்கட்டான நிலை நீங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தோண்றினாலும் நிறுத்தப்படலாம் என்பது மறுதலிக்கவன்று. அன்றியும், குனூத் அந்நாஸிலா தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு வித பயம் உணர்ப்பட்டது. சாதகமான் சூழ்நிலை தோண்றி வரும்போது சக இனங்களின் சந்தேகத்தை தவிர்ப்பதும் ஏற்புடைத்து என்று கருதியே இம்முடிவை உலமா சபை அரிவித்தது இது வழுவிலையே.
    “இந்நாட்டின் ஜனதிபதி ஒரு முழ சீலையை தைய்க்க நினைக்கின்ற போது இன வாதிகள் ஏழு முழ சீலையை கிழிக்கின்ற நிலைப்பாட்டை காண்கின்றோம்.” என்று கூறியுள்ளீர்கள். அவர், எங்கே எப்போது தைத்தார்? அவர் செய்தது என்னமோ கிழித்தது மட்டும் தான். இத்தகைய நிலை உருவானதற்கு காரணமே, அவரும் அவரது தம்பியும்தான் என்பது வெள்ளிடை மலை.

    ReplyDelete
  4. யார் இந்த நாஸர்? நீங்கதான் பொதுப்பலசேனவின் முஸ்லிம் பிரிவு உறுப்பினரா? நாடு மிக இறுக்கமான நிலையில் இருந்தபோது எங்கயோ பதுங்கி இருந்துவிட்டு இப்போது ஒரு சுமுகமான சூழ்நிலை வந்த போது ஆளுக்காள் பெரியாள்பத்த வந்திட்டிங்க குனூத் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு குனூத் ஓதினால் இன்னும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை வரும் என்றா பொறுத்திருங்கள் மக்கள் உங்களை புரிந்துவிட்டார்கள் பொதுபலசேனாவின் நல்ல சேவைகளில் ஒன்று உங்க சுய ரூபங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டியது அழுத்தம்கொடுத்து உலமா சபை குனூத்தை நிறுத்தச்சொன்னதாக இருந்தால் நீங்கள் உங்கள் வாய்களுக்கு பிளாச்டர் இட்டது எதனால்?

    ReplyDelete

Powered by Blogger.