ரவூப் ஹக்கீமுக்கு தவம் அனுப்பிவைத்துள்ள சூடான கடிதம்..!
(எஸ்.அன்சப் இலாஹி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இரண்டு தடவைகள் வெளியிறங்கி, மீண்டும் கட்சிக்குள் வந்த ஜவாத்தை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அங்கீகரித்தது எப்படியோ? அப்படித்தான் தவத்தையும் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதை ஜவாத்திற்கு நினைவுபடுத்துவது சாலப்பொருத்தமானதே. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் காவி உடுத்த கடும்போக்காளர்களுக்கு எதிராகவும், அவர்களைக் கட்டுப்படுத்த தயங்கும் அரச இயந்திரத்திற்கு எதிராகவும், செயற்படவும் குரல் கொடுக்கவும் வேண்டிய தருணத்தில், ஜவாத் என்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரின் கருத்துப்பற்றி உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு கொஞ்சம் கூச்சமாகவே உள்ளது. எனினும் ஊடகங்களில் மக்களிடம் சென்றிருக்கும் இவரின் கருத்துக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்தும் நோக்கில் அறிக்கைவிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 26.04.2013ம் திகதி ஊடகங்களில் வெளியான கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் அவர்களின் அறிக்கையினைப் பார்த்து ஆத்திரமடைவதை விடுத்து அனுதாபமே மேலிட்டது. தோல்வியின் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் அவர் தன்னை தேற்றிக்கொள்ள என்னை வடிகாலாகப் பாவிப்பதில் எனக்கு எந்த வேதனையும் கிடையாது. அவருடைய மன அழுத்தங்கள் மறைந்து போக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று அவருக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவலும் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றியும் தெரிவித்தார். தவம் என்ற தனிமனிதன் தன் சகோதரனுக்குக் கூறும் ஆகக்குறைந்த ஆறுதல் அதுதான்.
கடந்த 26.04.2013ம் திகதி ஊடகங்களில் வெளியான கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் அவர்களின் அறிக்கையினைப் பார்த்து ஆத்திரமடைவதை விடுத்து அனுதாபமே மேலிட்டது. தோல்வியின் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் அவர் தன்னை தேற்றிக்கொள்ள என்னை வடிகாலாகப் பாவிப்பதில் எனக்கு எந்த வேதனையும் கிடையாது. அவருடைய மன அழுத்தங்கள் மறைந்து போக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று அவருக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவலும் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றியும் தெரிவித்தார். தவம் என்ற தனிமனிதன் தன் சகோதரனுக்குக் கூறும் ஆகக்குறைந்த ஆறுதல் அதுதான்.
ஜவாத் முஸ்லிம் காங்கிரஸால் முகவரி கொடுக்கப்பட்டிருந்த காலத்தில், என்னுடைய மச்சான் அன்சார் என்பவரும் நாங்களும், மறைந்த தலைவர் அவர்களோடும் அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸடீனோடும் மிக நெருக்கமாக இருந்தவர்கள். சேகு இஸ்ஸடீன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பத்திலும், வியாபித்தலிலும் சேகு இஸ்ஸடீனின் பங்களிப்பை அறிந்தவர்கள் என்ற வகையில், நாமும் கட்சியில் இருந்து தூரமானோம். அவ்வாறு தூரமாகி வேறுவழியில் பயணித்தபோதும், தலைவர் அஷ்ரப் மரணமடைந்த தருணம் அக்கரைப்பற்றில் முழுக்கடை அடைப்பிற்கான அழைப்பு விடுத்ததும், துக்கம் அனுஷ்டிக்கச் சொன்னதும் நாங்கள்தான் என்பதை ஜவாத் அறிந்திருக்க நியாயமில்லை.
அதுமட்டுமல்ல, தலைவர் அஷ்ரபிற்கு அக்கரைப்பற்றில் இரங்கல் கூட்டம் நடாத்தியதும் நாங்கள்தான். அங்கிருந்த முஸ்லிம் காங்கிரஸினர் அல்ல. இதுவும் ஜவாத்திற்கு தெரியாமல் இருந்திருக்கும். ஒருவேளை தங்கம் கடத்திவரும் போது விமான நிலையத்தில் ஜவாத் கைது செய்யப்பட்ட விடயத்தில், தலைவர் அஷ்ரபில் அவருக்கு இருந்த கோபத்தில், தலைவர் அஷ்ரபின் மரணத்தை ஜவாத் சந்தோசமாகக் கொண்டாடி இருக்கலாம். அதுவே எமது மனநிலையும் என்று அவர் எண்ணத்துணிவது தவறானது. எமது அரசியல் நாகரீகத்தை அறிந்து கொள்ள அவருக்கு இன்னும் பல தசாப்தங்கள் தேவைப்படும். அதற்கு அவர் ஆயுளும் போதாது.
ஜவாத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸில் எனது மீள்பிரவேசம் அவரைத் தோற்கடித்ததாக அவர் உணர்கிறார். வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, மருதமுனை மக்கள் தனக்கு வாக்களிக்காமல் தவத்திற்கு வாக்களித்து தன்னை தோற்கடித்ததாக அம்பாறையில் வைத்தே பகிரங்கமாகக் கூறித்திரிந்தார். மருதமுனை எனது ஊர் என்பதை ஜவாத் மறந்ததற்கு நான் என்ன செய்யமுடியும்.
ஜவாத் இருட்டில் தொலைந்ததை வெளிச்சத்தில் தேடுகின்றார். அவர் தோல்வியுற்றது எனது மீள்பிரவேசத்தால் அல்ல. மாறாக, கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக கடந்த காலத்தில் அவர் செய்த துரோகங்களால்தான்..
1) கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்து களம் இறங்கிய போதும், திரை மறைவில் தற்போதைய ஜனாதிபதியின் அணியுடன் கைகோர்த்துக்கொண்டதனால், ஜவாத் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
2) கடந்த மாகாணசபைத் தேர்தலில் சிஹல உறுமய கட்சியின் செயலாளரோடு கட்சியை உடைத்து அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தல் கேட்க உல்லாச விடுதியில் பேச்சுவார்த்தை நடாத்தியது,
3) அக்கரைப்பற்று அமைச்சரோடு அரசியல் தேனிலவு கொண்டாடியது, என நீண்ட பட்டியல் மக்களுக்குத் தெரியவந்ததால் தான், மக்கள் ஜவாத்தைத் தோற்கடித்தனர் என்பது ஜவாத்திற்குத் தெரியாமல் போனது அவரின் துரதிஸ்டமே.
2002ம் ஆண்டு புலிகளுக்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பிறகு, வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த நிர்க்;கதி பற்றி பேச, அதற்காக செயற்பட யாரும் முன்வராதபோது, ஷஷஒலுவில் பிரகடணம்' எனும் மக்கள் பிரகடணத்தை செய்தவர்கள் நாங்கள். அதற்கு தலைமை கொடுத்தவன் நான். உயிரைப் பணயம் வைத்து வடக்கு – கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசியம் ஃ இனம் என்று நிறுவியவர்கள் நாங்கள். அதனூடாக அன்றைய சமாதான முயற்சியில் முஸ்லிம்கள் என்ற மூன்றாவது பரிமாணத்தை உணரச்செய்வதவர்கள் நாங்கள்.
அவ்வாறு, அன்றும் ஜனநாயக ரீதியில் இராஜதந்திர அணுகுமுறைகள் ஊடாகவே முஸ்லிம்கள் தமது பிரச்சினையை வெளிக்கொணர வேண்டும் எனச் செய்து காட்டினோம். இன்றும் அவ்வாறே செய்கின்றோம்; சொல்கிறோம். ஜவாத், உணர்ச்சிவசப்பட்டு ஆயுதம் தூக்குகின்ற கதைகளை உயர்பீடக் கூட்டங்களில் பேசுவதுபோன்று, எம்மால் பேசமுடியாது. ஏனெனில், 30 வருடகால ஆயுத போரட்டத்தை விடவும், தமிழ் சமூகம்; இராஜதந்திர அணுகுமுறைகள் ஊடாகத்தான் இன்று மிகப் பெரிய சர்வதேச கவன ஈர்ப்பை பெற்றுள்ளது என்பதை உணர்ந்துள்ள நாம், எதையும் பக்குவமாகத்தான் அணுக முடியும். இதனை ஜவாத் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி அவரிடம் இல்லாமல் போனதற்கு என்னைக் குறைகூற வேண்டியதில்லை.
மறைந்த தலைவர் அஷ்ரப் இந்திய இராணுவம் வெளியிறங்கக்கூடாது; அப்படி வெளியிறங்குவதாக இருந்தால் அவ்வெற்றிடத்தை நிரப்ப தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் எனக்கூறினார். இந்தியாவின் பின்னணியில் இயங்கிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்தில் மனம்வெம்பிக் கிடந்த முஸ்லிம்கள், தலைவர் அஷ்ரபின் இந்தக் கருத்தில் குறை கண்டனர். அஷ்ரப் றோவினால் விலைகொடுத்து வாங்கப்பட்டுவிட்டார் என்று கூறினர். இந்திய இராணும் வெளியிறங்கிய பின்னர், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்மையால் முஸ்லிம்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட போது, அஷ்ரப் இந்திய இராணுவம் வெளியிறங்கக்கூடாது என்று கூறியதின்; யதார்த்த நிலையை மக்கள் உணர்ந்தனர். தலைவர்கள் என்பவர்கள் தற்காலத்தில் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதற்காக, மக்களின் மனவெளிப்பாட்டை மட்டும் பிரதிபலித்துக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக, எதிர்காலத்தை உய்த்தறிந்து, தற்கால நிலைப்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும்; என்பதற்கு தலைவர் அஷ்ரபின் இந்திய இராணுவம் தொடர்பான விடயம் மிகச் சிறந்த உதாரணமாகும்.
அந்தவகையில் தான், பெரும்பான்மை சமூகத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் இன்றைய அரசில் இருந்து, முஸ்லிம் காங்கிரஸ் விலகினால் என்ன நடந்துவிடப்போகிறது என்றும், அதனூடாக முஸ்லிம் சமூகம் பெற்றுவிடக்கூடிய உடனடி விளைவுகள் என்ன? எனவும் நான் கேள்வி எழுப்பினேன். முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறினால், ஜனாதிபதியை சந்திக்க முடிவது; அமைச்சரவையில் பேசமுடிவது; அரச கட்சித் தலைவர்களை சந்திக்க முடிவது; பொதுபலசேனாவிற்கு எதிரான சட்டத்தை இயற்ற முடிவது போன்றவற்றை செய்ய முடியுமா? எனவும் வினவினேன். மேலும், இந்த அரசாங்கத்திற்குள் இருந்து; இந்த அரச இயந்திரத்திற்கு எதிராக முஸ்லிம்களுக்காகப் போராடி; இந்த அரசு முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம்களுக்காக போராடியதற்காக வெளியிறக்கி; அதன் ஒட்டுமொத்த சிறுபான்மை விரோத முத்திரையை கிழிக்கும் வரைக்கும்; முஸ்லிம் காங்கிரஸ் தானாக வெளியிறங்கக்கூடாது என்றும், அவ்வாறு இந்த அரசின் முகத்திரையைக் கிழிப்பதே, முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரச இயந்திரத்திற்கு வழங்கும் உச்ச தண்டனையாகவும் இருக்கும் எனவும் கூறினேன். இவ்வாறு நான் கூறுவதை அரசின் முந்தானைக்குள் ஒழிந்திருப்பது என அர்த்தப்படுத்துவது முட்டாள் தனமாகும்.
இந்திய இராணுவம் தொடர்பில் அஷ்ரப் கூறியதை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள், பிந்திய நாட்களில் அதன் தீர்;க்க தரிசனத்தை உணர்ந்ததைப்போல் தான், நான் கூறிய கருத்தையும் ஒருநாளில் மக்கள் விளங்கிக் கொள்வார்கள் ஷஷஉள்ளிருப்புப் போராட்டம்' பற்றி மக்கள் அறியாமல் இருக்கலாம், மாகாண சபை உறுப்பினராக இருந்த ஜவாத்திற்குமா புரியவில்லை. ஷஷஉள்ளிருப்புப் போராட்டம்', ஷஷஒத்துழையாமை இயக்கம்' என மிகப் பெரிய ஜனநாயக ஆயுதங்களை முஸ்லிம்கள் அரச இயந்திரத்திற்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தருணத்தில், ஜவாத் சிறுபிள்ளைத் தனமாக விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும்.
அதுமட்டுமல்லாமல், வெளியே நின்று வெற்றுப் பேச்சுப் பேசாமல், உள்ளே இருந்து உலுக்கிக் காட்டுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக்கூட இவரால் உணரமுடியாமல் போனது, இவரது அரசியல் அறியாமையையே வெளிக்காட்டுகிறது.
முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானவர்களும், இழிவான அரசியல் எண்ணத்தைக் கொண்டவர்களுமே அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும் எனக்கூறுகிறார்கள் என்று நான் கூறியிருந்த விடயம், ஜவாத்தை கலக்கமடையச் செய்திருக்கின்றது என்றால், ஜவாத்; ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளிருக்கும் எதிரியாக இருக்கவேண்டும் அல்லது இழிவான அரசியல் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும். இதில் எது என்பதை எப்போதோ மக்கள் தாமாக உணர்ந்து கடந்த தேர்தலில் தீர்;ப்பும் வழங்கி விட்டார்கள்;. அதற்குப் பின்னரும், மக்களை ஏமாற்றும் பொருட்டு, ஷஷஎரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம்' என்பதைப் போன்ற அரசியலை ஜவாத் செய்ய நினைப்பது அவர் திருந்தமாட்டார் என்பதையே வெளிக்காட்டுகிறது.
ஜவாத் திருந்த வேண்டும். மக்கள் கோபமாய் இருக்கிறார்கள் என்பதற்காக,
ஷஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி நாமும் குளிர் காய்வோம்' என்று நினைப்பவர் தலைவராக இருக்க முடியாது. மாறாக, மக்களுடைய விடயங்களில் நிதானமாக் பக்குவமாக் தற்கால அரசியல் செல்நெறியை உள்வாங்கி; எதிர்காலத்தை உய்த்தறிந்து தீர்மானங்களை எடுத்து; மக்களை வழிநாடாத்த வேண்டும். இதனை ஜவாத் செய்யாமல் தொடர்ந்தும் தன் பாணியிலேயே ஷஷபழைய குறுடி கதவைத் திறடி' என்று சென்றால், முஸ்லிம் சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் சுயநல அரசியல் கும்பலில் ஒருவராக அவரையும் மக்கள் நிரந்தரமாக அடையாளப்படுத்திவிடுவர்.
ஷஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி நாமும் குளிர் காய்வோம்' என்று நினைப்பவர் தலைவராக இருக்க முடியாது. மாறாக, மக்களுடைய விடயங்களில் நிதானமாக் பக்குவமாக் தற்கால அரசியல் செல்நெறியை உள்வாங்கி; எதிர்காலத்தை உய்த்தறிந்து தீர்மானங்களை எடுத்து; மக்களை வழிநாடாத்த வேண்டும். இதனை ஜவாத் செய்யாமல் தொடர்ந்தும் தன் பாணியிலேயே ஷஷபழைய குறுடி கதவைத் திறடி' என்று சென்றால், முஸ்லிம் சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் சுயநல அரசியல் கும்பலில் ஒருவராக அவரையும் மக்கள் நிரந்தரமாக அடையாளப்படுத்திவிடுவர்.
இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு, கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்தும் நோக்கோடு இரண்டாவது தடவையும் எனக்கெதிராக அறிக்கை விட்டிருக்கும் ஜவாத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன் என மேலும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று ஆயிஷா மகாவித்தியாலய "சாலிஹா மன்றம்" திறப்பு விழா சஞ்சிகையை அண்மையில் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தவம் அவர்களின் ஆசிச் செய்தியை வாசித்தேன். அமைச்சர் அதாஉல்லாஹ் அல்லாஹ்வின் அருட்கொடை என்று அன்று அவர் வர்ணித்திருந்தார். இப்போது அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிருக்கின்றார். அது போலதான் இந்த மோதுகையும். அரசியல் எனும் பரமபதத்தில் இந்த மாதிரி அறிக்கைகள் சகஜம். இதில் மக்கள் பலியாவதுதான் ஓர் துக்கமான விடயம். அல்லாஹு அக்பர்.
ReplyDeleteMr. Thavam
ReplyDeleteYou have very good imagination power.
The problem for Muslim minority started more than one year back, during this period.
• How many times SLMC leader met president, ministers and party leaders to discuss Muslims’ problem the problems and what are the outcomes. Even his only effort have a special cabinet meeting also denied.
• What is the proposed legislation against BBS, what is the current position of it?
• What are the actions taken against government machinery while SLMC with government?
• How far the SLMC pressurized the government, when you expect that the president expels the SLMC from the government for its intolerable, aggressive fighting spirit?
• When are you all going to unveil mask of government? Will it the maximum punishment for the government? (very good joke)
• Is the SLMC shaking the government from inside?
From all these statement what you are telling to the Muslim community, do you want them to tolerate everything whatever happened, until government expel SLMC?
Are you in this world? You can make a very good comedy movie.
அலீ பாபாவும் நாட்பது திருடர்களும்..................எல்லாம் சரி அரசியல்வாதி அவர்களே...உங்க தலைவர்ட ஒரு தீர்க்க்கதரிசனம் சொல்லுங்கோவன் கேப்பம் வெறும் பந்தி பாயிர விளயாட்ட தவிர
ReplyDeleteஉங்களுடைய சொந்தப்பிரச்சனைகளுக்காக ஒருவரை ஒருவர் சாடுவதை விட்டுட்டு உங்களை நம்பி ஏமாந்துபோய் இருக்கும் அப்பாவிச் சமூகத்திற்காக ஏதாவதை செய்யுங்கள்.இக்கட்சி அல்குர்ஆன், ஹதீஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கட்சி.ஒரு மூமீனின் மானத்தை காப்பது இன்னொரு மூமீனின் கடமை... உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே மேல்... உங்களின் அரசியல் இலாபத்திற்காக,சலுகைக்காக, பிரபல்யத்திற்காக இவ்வாறான கீழ்த்தரமான அறிக்கைகள் விட்டு அரசியல் செய்வதை கைவிட்டுட்டு இதய சுத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்... உங்களிடம் இருந்து இதய சுத்தியான அரசியலை எதிர்பார்ப்பது எங்கள் தவறு என்பது எமக்குத்தெரியும்.. இக்கட்சிக்கு வாக்களித்து ஏமாந்துபோன சமூகத்தின் சார்பாக இக்கருத்தை தெரிவிக்கின்றேன்... தலைவர் அவர்களே... இப்படிப்பட்ட அநாகரிக அரசியல் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்... இன்றும் ஞாபகம் இருக்கிறது இந்த கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் உங்களை பற்றி பேசிப்பேசிதான் இன்று அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அந்த நேரம் நீங்கள் கண்ணியமான வார்த்தைகளால் தான் பதில் கூறீனீர்கள்.ஆனால் இன்று உங்கள் கட்சிக்குள்ளேயே இவ்வாறான நிலையுள்ளது... உடணடியாக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும்...
ReplyDeleteதம்பி தவம், நீர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், நீர் அரசியல் செய்வது புலப்புக்காக, ஜவாத் அரசியல் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமைகளை ஜனநாயகரீதியில் வென்ரடுப்பதட்காவும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் குரல் கொடுப்பதற்குமான அஞ்சா நெஞ்சம் கொண்ட சுயநல மற்ற ஒரு மூத்த முஸ்லிம் காங்கிரஸ் போராளி.
ReplyDeleteஜவாத் எந்த சந்தர்பத்திலும் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்டதும் கிடையாது மாற்று கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் செய்ததும் கிடையாது. ஆனால் நீர் இந்த கட்சியை அளிப்பதில் மிகவும் தீவிரமாகவும் அந்த மாமனிதர் தலைவர் அஷ்ரப் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இட்டுகட்டி விமர்சித்து செயற்பட்டவர்.
முஸ்லிம் காங்கிரஸ் என்றால் ஜவாத், ஜவாத் என்றால் முஸ்லிம் காங்கிரஸ். மன சாட்சி உள்ள எந்த முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போராளிகளும் ஜவாத்தின் காங்கிரசுக்கான பங்களிப்பை சான்று பகர்வார்கள்.
உம்மைப் போன்றவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எட்டுக்குமாறு தலைமையிடம் கேட்கும் அளவுக்கு தலைமை இருக்கிறது என்பது மிகவும் கவலை அளிக்கிறது.
தவம்..!!!, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் ஆதரவாளர்களும் அதாவுல்லாவுக்கு கடந்த மாகான சபைத் தேர்தலில் காரி முகத்தில் உமிழ்ந்ததின் வெளிப்பாடுதான் உமது வெற்றி என்பதை மறந்து விடாதீர்.
Now you all went into rolling party please do anything to voted public in developing side but no need any reporting war into party my dear Thavam and Jawath.
ReplyDeleteஇப்படியே இவர அவரும் அவர இவரும் குறை சொல்லிக்கொன்டிருந்த சரி. இன்னும் யாரும் பக்கி இருந்தா அலசுங்க இதுதான் உங்கட அரசியலா?.
ReplyDeleteno time to see this
ReplyDeleteWe don’t have time to seeing this article please!!!!
ReplyDeleteBoth are passing ball
It seems that there are many people who just want to extend this argument into a very big issues within the party in general. And it has also paved ways for opposite political supporters to get into this argument and create further conflict on this issue. And I very strongly fee that while Jaffna Muslim web provides the fighting field for all of them it indirectly trying to do a character assassination of young politicians with good vision for the future society. This is not an issue of politics, but an individual attack which I hope that all have to stop immediately.
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் மக்கள் வாக்களித்தது தன்க்குத்தான் என்று தவம் நினைப்பது ஒரு முட்டாள்தனம்,அதாவுல்லாவின் மீது கொண்டகோபத்தாலும்.தலைவருக்கு அக்கரப்பற்றில் கால்பதிக்க ஒரு ஒரு காய் தேவைப்பட்டது,இதற்காக ஊரெல்லாம் தவத்திற்கு ஒருவாக்குபோடும்படி ,பிரச்சாரம் செய்தார்கள்,கட்சிக்காக அல்ல அதாவுல்லாவை அட்க்கவேண்டும் என்பதற்காகத்தான்,இப்படி ஒருபிரச்சாரம் இல்லாவிட்டால் தவ்ம் தவ்ம்கிடந்தாலும் வந்திருக்கமாட்டார்,
ReplyDeleteஒலுவில் பிரகடனம் என்றும் முஸ்லிம்களும் தனியான இனம் என்று நிறுவியதும் தான் என்ற தோரணையில் தவம் கருத்துக்களை விதைத்திருக்கின்றார். ஒலுவில் பிரகடனம் தவத்தின் தத்துப்பிள்ளை கிடையாது. அது ஒலுவில் பல்கலைக்கழக சமூகத்தினதும், இலங்கையின் ஏனைய பல்கலைக்கழக சமூகத்தினதும் கூட்டு முயற்சி. ஒலுவில் பிரகடன ஏற்பாட்டுக்குழுவில் நானும் ஒரு அங்கத்தவன் தவம் யூனியன் தலைவர், யூனியன் தலைவராக இருந்தமைக்கான காரணமே அக்கரைப்பற்றான் என்பதும் அதாவுல்லாவுக்கு நெருக்கமானவர் என்பதும்தான். அப்போது ஒரு சிலர் சொன்னார்கள் இந்த ஒலுவில் பிரகடனத்தை தவம் தனது அரசியலுக்காக பின்னாளில் பயன்படுத்துவான் என்று. இவ்வளவு அவசரமாக அதனைப் பாவிப்பீர்கள் என்று நாம் கனவிலும் எண்ணவில்லை. நீர் உம்முடைய சாக்கடை அரசியலை எவ்வாறு வேண்டுமானாலும் மேற்கொண்டுவிட்டுப்போகும், அதற்கு ஒலுவில் பிரகடனம் என்னும் உயர்வான ஒரு அரசியலுக்கு அப்பால் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பாவிக்காதீர்.
ReplyDeleteஅப்துல்லாஹ்
now we can see our politician. this is the way they all use our golden votes for there own purpose. what the have done for our umma? nothing. they and their famiy become rich and welthy in thier lfestyle. when our whole muslim society have severe problem they don't even open there mouth or any single sentence written. did all you notice that? when he has have own problem he written a big article, unforunately i did not read at all, because it is no important for us
ReplyDeletesanthi serikkerathu sandai neruththunkal
ReplyDeleteANBIN KALMUNAI MAKKALAY , THAWATHTHIRKKU VAAKKALITHTHEERHALAY, IWARAIPPATRI VILANGUM INNUM SUNANGUM MAKKAL,
ReplyDeleteDear He Opinion
ReplyDeleteYou have given some bad opinions. if you need to comment sensibly on Jaffna Muslim, go ahead. We strongly condemn you that you have no any damn authority to dictate Jaffna Muslim or its readers. It is not the Jaffna Muslim provide the fighting field, it is your Party and its discipline that you have brought your fight to the road.
Your comment shows your utter ignorance that you have mentioned that the comments are assassination of the character of Thavam. My question is: Does he has one? I mean the "Character"??? and the word assassination is not anywhere appropriate to him, it is used for famous people not the notorious ones.
You have commented Thavam as a young politician with good vision for the future?????? please clarify how did you bring him into the "good vision";
- When he is a drunkard
- His hand has blood in Quddoos' massacre
- When he has misappropriate huge amount of money when he was in his chairmanship in the Akkaraipattu Pradasiya Sabah.
- When he contested the local government election; naturally he was a poor man, struggled to meet even the day to day expenditure; BUT NOW A MULTI-MILLIONAIRE? his salary was just below 15,000 rupees at Pradeshya Sabah Tell us the possibilities, HOW HE BECAME AN OVER NIGHT RICH MAN, AFTER HE WON AND BECAME THE CHAIRMAN? We know you you conceal them, may be you are in the "NAKKUNDAAR" category.
- NOW, He has many bare lands!! Blood-money and black money, He built his own house!! Now he is doing even extension to his nicely built house (Any one can go and have a look)!!!
And so on.. and on.... and on...
TELL US HONESTLY: DOES HE HAS ANY CHARACTERISTIC TO HAVE A VISION FOR FUTURE??????????? DEFINITELY -NOT, NOT AT ALL.
Last but not least, please do not comment authoritatively which you do not have any upper hand or whatsoever.
றமழான் மாதத்தில் நொன்பு திறக்க வந்த ரௌஃப் ஹகீமயும் அவருடன் வந்தவர்களயும் நோன்பை திறக்க விடாமல் தடுத்தமை, அனிஃபா மவ்லவியை கடத்தி அவமானபடித்தியமை, நுரைச்சோலை வீட்டு திட்டத்தை பெரியல் ஊடாக ஸுனாமி அஹதிகளுக்கு கிடைக்க விடாது தடுத்தமை, அக்கரைபற்றில் முஸ்லிம் கொஙிரெஸ் ஆதரவலர்களை தாக்கி அலித்தமை போன்ற அதாவுல்லாவின் நிகழ்சி நிரல்கலை அடாவடியாகவும் அசிஙமாகவும் முன் னின்று காரியம் பார்த்த ஆஸாமீ நீங்கள் தான் என்று ஊர் அறியும் , உலகமும் அறியும். தென் கிழக்கு பல்கலை கழகப் பேரவை நடாத்திய ஒலுவில் பிரகடனத்தின் சொந்தக்காரர்கல் உளத்தூய்மயும் சமூகப் பற்றும் உள்ள இஸ்லாமிய இளெஞர்களே. அவர்கலின் தியாகத்தில் சவாரி செய்ய பார்கின்றீர்கள். வெட்கம்!! வெட்கம்!! வெட்கம்!!
ReplyDelete