முஸ்லிம் மாணவர் உரிமைக்காக கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் (பிரத்தியேக படங்கள்)
பொத்துவில் பாக்கியாவத்தை அல் கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்குமாறு கோரி பாடசாலை மாணவர் ஒருவரின் தந்தையொருவர் பாடசாலையின் இரண்டுமாடி கட்டிடத்தின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
தொடர்ந்து நான்காவது நாளாகவும் 29-04-2013 இன்று காலை 7 மணியிலிருந்து அல்-கலாம் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக் குழு மற்றும் பெற்றோர்கள் இணைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நடாத்தினர். மேலும் இதுவரை காலமும் தமது கோரிக்கைகளை உயரதிகாரிகள் எவரும் கவனத்திற் கொள்ளாததால் ஆத்திரமடைந்த பெற்றார் ஒருவர் பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடத்தின் கூரையின் மேல் ஏறி 'உயரதிகாரிகள் எமது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் வரை' இறங்கப்போவதில்லை எனக்கூறி பிடிவாதமாக சுமார் இரண்டரை மணித்தியாலமாக தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.
பின்பு அங்கு கூடிய பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் வாக்குறுதிக்கு அமைவாக இன்று காலை 9.30 மணியளவில் தமது போராட்டத்தை எதிர்வரும் வியாழன் வரை ஒத்திவைத்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை வருவதாக தவிசாளர் கூறியுள்ளார் தவறும் பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தை தொடர்வோம் என பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





No another way it to our children's education.
ReplyDeleteஇதன் அர்த்தம் என்ன - தற்கொலை முயற்சியா? அப்படியான முயட்சிக்குத்தான் கூரையில் ஏறனும் மற்றவர்கள் பயந்து தீர்வுக்கு வரணும்... வரம்புகள் மீறுவது நல்லதல்ல... இதுவெல்லாம் கவலைக்குரிய விடயம். உண்மையாக படிக்க நினைப்பவர்களுக்கு நமதூரிளிருக்கும் ஆசிரியர்கள் போதும். மாணவர்களின் என்னிக்கையோடும் பாடசாலைகளின் என்னிக்கையோடும் ஒப்பிடும் போதும் தான் இந்தக்குறைபாடு வருகிறது... இதற்க்கு அடிப்படையே பிரச்சினை... இருப்பதைக்கொண்டு போதுமாக்கி கொள்ள யாரும் முனைவதில்லை. நமக்கென்ற இடத்தில் இல்லையென்பதே அதன் வருத்தமாகிறது... உதாரணத்துக்கு நமது ஜும்மா பள்ளிவாசல் கட்டுவதற்க்கு முடியாத சமூகம் வேறொரு பள்ளியைக்கட்டி சாதனை படைக்கிறது என்பது சாதனையல்ல - நமக்குள்ளிருக்கும் விடாமுயச்சியல்ல விட்டுக்கொடுக்கா முயச்சியே ஆகும்.
ReplyDeleteஅரசியல் என்பது ஒரு வேடிக்கை நிகழ்ச்சி. இதை TV இலும் பார்க்கலாம் நேரிலும் பார்க்கலாம். சில சமையங்களில் இது மாதிரியான சம்பவங்கள் மாணவர்களைப் பாதிக்கும். - அனைத்தும் இலவசக்கல்வியே.