'ரோம் எரியும் வேளையில்' சிரித்து மகிழும் ஹக்கீமும் மகிந்தவும் (படம்)
கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சிறிலங்கா - சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலகலப்பாக சிரித்துப் பேசும் படம் இன்று திங்கட்கிழமை, முதலாம் திகதி கொழும்பில் வெளியிட்டுள்ளது.
“ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார்.
பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்னர், அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் படி ஜனாதிபதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஹக்கீமும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கம் தடுக்கத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையிலேயே நேற்றுமாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன இணைந்து அவர் ரக்பி ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சீன தைபே அணியுடனான ரக்பி ஆட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் மகனும் மகனும் கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச சிறிலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
இதில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Arasiyalil Ithu ellam Sakajam appaa.. :)
ReplyDeletenalla(ketta) thalaivarum namby emarum appavi muslimkalum.but ennal onru mattum koora mudiyum. nalai election enral nam makkal ellavattrai yum maranthu emathu thalaivarai thalai il vaithu kondaduvarhal. emarupavan irukkum varai ematrupavan irunthu konde iruppan.
ReplyDeletebut they must be their head down in the day of judgement.
we should not go for a wrong conclusion by looking at pictures like this.
ReplyDeletei am not a supporter of Hakeem , but i beleive this is part of a diplomacy to get close to MR ( King of sri lanaka)to achive something.
This kind of political diplomacy is needed at this situation. since we don't have any leverage to threaten the goovernemnt any way.
our older politicians like sir bathiyudeen mahamoud and Mr ashraf achieved a lot by getting closing to the presidents of past
hope this is for a good reason
WHEN IS HE GOING TO INDONESIA ?
ReplyDeleteBBS-rauf hakeem I thadai saiungal-ungalukku punniyamaha phohum.NANGAL ANAIVARUM UNGALUKKU PAKKA PALAMAHA IRUPPHOM.
ReplyDeleteINTHA VISAYATHTHIL MATTUM.
சகோதரர்களே ஒரு படத்தை மட்டும் பார்த்துவிட்டு நாம் எந்தமுடிவுக்கும் வருவது தவறு, உண்மையில் ரவூப் ஹக்கிம் ஒரு கையாலாகாத தலைவரென்றும் ஏட்டுச்சுரக்காயென்றும் சொல்கின்றார்கள் அதை அவரும் நிருபித்துக்கொண்டுதான் வருகின்றார் ஆனால் நாம் இதுபோன்ற படங்களைப்பார்த்து நமது கருத்துக்களை சொல்லமுடியாது இதுவுமொரு அரசியல் அணுகுமுறையாகத்தான் அவர் எண்ணிக்கொண்டு செய்திருக்கலாம். ஆனால் அவர் இந்த நேரத்தில் இந்தோனிசியாவுக்கு சென்றது அரசின் சதித்திட்டங்களிலொன்றையே சுட்டிக்காட்டுகின்றது.
ReplyDelete