ஜனாதிபதியின் உத்தரவாதம் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளதாம்..!
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உத்தரவாதம் முஸ்லிம்களுக்கு மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 5ம் திகதி வெள்ளிக் கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற போது அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு அநீதிகள் அடக்கு முறைகள் சம்மந்தமாக ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கெனங்க இனி ஒரு போதும் முஸ்லிம்களுக்கு எதிரான எதுவித அநீதிகளும் இடம் பெறமாட்டாது எனவும் அவ்வாறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி அவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியதையிட்டு இந்த நாட்டில் மகிழ்சியடையாத எந்த முஸ்லிம்களும் இருக்க முடியாது.
அதேபோன்று மறுபுரத்தில் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவாதம் எத்தனை வீதம் நம்பிக்கைக்குறியதாக இருக்கும் என்ற சந்தேகமும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் ஏற்படாமலுமில்லை ஏன்எனில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் மத அடக்கு முறைகளின் போது எந்தவொரு இனத்திற்கு அநீதி இழைக்கப்பட இடமளிக்க மாட்டேன் என பல்வேறு பொது நிகழ்வுகளின் போது உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்து இருந்தார்.
அவ்வாரான உத்தரவாதத்தினை முஸ்லிம் அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம்களும் முழுமையாக நம்பி பொறுமையுடன் செயற்பட்டு வந்தனர் ஆனால் அனைவரினதும் நம்பிக்கையும் வீன்போனது ஜனாதிபதியின் அவ்வுரைகளின் பின்னரே இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான மிகமோசமான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதன் பின்னர் எவ்வாரான உத்தரவாதமாக இருந்தாலும் அதனை ஒரு சந்தேகக் கண் கொண்டே முஸ்லிம்கள் பார்க்கத் தொடங்கி விட்டனர் முஸ்லிம்கள் இந்த நாட்டு அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் மீது கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக தற்போது குறைந்து கொண்டு செல்கின்றது என்பதற்கு கடந்த வாரம் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட முழு நாள் கடையடைப்பும் ஹர்தால் அனுஸ்டிப்பும் சான்றாகும்.
இந்த நாட்டு முஸ்லிம்கள் கட்சி ரீதியாக பிரிந்து நின்று வேறு வேறு சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்டுயிருந்த போதிலும் இன்று அனைவரும் இந்த அரசாங்கத்தின் பங்காளியாகவே இருந்து வருகின்றனர்.
இதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்தின் விசுவாசிகளாகவே இருக்கின்றார்கள் இவ்வாரான ஒரு சுழலில் தனியே முஸ்லிம்களுக்கு எதிராக மத அடக்கு முறை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தலையாத கடமை இதிலிருந்து தவறுகின்ற போது அதன் பாதிப்பு ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்குமே ஏற்படும் என்பதே மறுக்க முடியாத உண்மை
இன்று இந்த அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருந்த அல்லது இருக்கும் அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள் கூட அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அது மாத்திமின்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்மைப்பினர் ஏன் பௌத்த தேரர்கள் கூட முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறையை கண்டிப்பதுடன் அரசாங்கத்தை இதுவிடயத்தில் பகிரங்கமாக விமர்சிக்கவும் தவறவில்லை.
எனவே இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் 20 லட்சம் முஸ்லிம்களின் மதக் கலாச்சாரத்தையும, பொருளாதாரத்தையும், குடியிருப்புக்களையும், வணக்கஸ்தலங்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தினதாகும் அதற்கான வேண்டுகோளையும் கோரிக்கையையும் முஸ்லிம்கள் அரசிடமே விடுக்க முடியும்
என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்த நாட்டின் ஜனாதிபதியும் அரச பாதுகாப்புத்தரப்பும் உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே முஸ்லிம்களுக்கு எதிரான மத அடக்கு முறையையும் பொருளாதார அழிவையும் இன கலவரத்தினையும் தடுத்து நிறுத்த முடியும் அப்போதே இந்த அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும் எனவும் தெரிவித்தார்

ஒங்கள போல நம்மட நாட்டுக்கு 10 அரசியல் வாதிகள் போதும் பொது மக்களை பைத்திய காரனாகி அதுல சந்தோஷ படுற நாய் ஜாதி மனுசனுங்க. ஒங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லியா இப்பிடி பேச? சோறு தானே தின்கிரிங்க? ஜனாதிபதி சொன்னாரம் இவர் சந்தோஷ படுறாராம். மூல இல்லாத பைத்திய கார அரசியல்வாதிகள். நீங்கல்லாம் famouse ஆகணும்னா கூட்டியும் கொடுபிங்க.
ReplyDeleteFool of the year,,,
ReplyDeletewell said Anes Ahamed
ReplyDelete