Header Ads



சூடானில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை - ஒமர் அல்-பஷீர்


சூடான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என சூடான் அதிபர் அறிவித்துள்ளார். 

சூடான் பாராளுமன்றத்தில் நேற்று பேசிய அதிபர் ஒமர் அல்-பஷீர் கூறியதாவது:- 

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து, இன்று முதல் அரசியல் அதிகாரங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண இந்த அரசு விரும்புகிறது. நாட்டில் உள்ள ஆயுதமேந்திய போராளிகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் மற்றும் சமூக சக்திகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தேசிய அளவிலான நிரந்தர தீர்வு காணப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள சூடான் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பரூக் அபு ஈசா, அதிபரின் இந்த புதிய முடிவை வரவேற்றுள்ளார். 

No comments

Powered by Blogger.