கிண்ணியாவை அழகுபடுத்தும் முன்னெடுப்பு தொடரும் - நகரபிதா ஹில்மி
(அபூ அஹ்ராஸ்)
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தபடுத்தும் திட்டம் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நகரபிதா மற்றும் நகரசபை ஊழியர்களால் பூச்சாடி வைக்கப்பட்டதோடு புஹாரியடி சந்தியின் அழகுபடுத்தும் வேலைகள் நிறைவுபெற்றுள்ளது. அதனை பாதுகாத்து வளர்ப்பதற்கான பராமரிப்பு வேலைகள் நகரசபை தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புஹாரியடி சந்தி அழகுபடுத்தும் பணிகள் நகரசபையால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடிவமைப்புக்கான அனுசரணையினை சஹாரா என்டபிரைசஸ் உரிமையாளர் எம்.பைசல் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு புஹாரியடி சந்தியில் காணப்பட்ட அனுமதியற்ற விளம்பரப் பதாதைகள் பல அற்றப்பட்டதோடு இனிவரும் காலங்களில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பதாதைகள் அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


முதலில் பொய் சொல்வதை நிறுத்துங்கள் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூகத்தை ஏமாற்றும் செய்திதான் இது
ReplyDeleteKalmunai Val Kadduvasi Mayerukkum Aduthu Solungal Kalmunai nagarathaiyum Alagupaduthumaru. Thank you Dr. Hilmy Sir
ReplyDeleteAlahu maathiri onrayume kaanavillaye!!
ReplyDelete