பெஷன்பக் மீதான தாக்குதல் - இலங்கைக்கு அபகீர்த்தி

(Adt) பெப்பிலியான சம்பவத்தை இன்று முழு உலகமும் அறிந்துள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சீகிரியாவை விற்பனை செய்யப் போகிறார்கள் கெசினோ ஆரம்பிக்கப் போகிறார்கள் என அன்று ஐக்கிய தேசியக் கட்சி மீது சிலர் குற்றம் சுமத்தியதாக கரு ஜயசூரிய நினைவுபடுத்தியுள்ளார்.
எனினும் அன்று ஐதேக மீது குற்றம் சுமத்தியவர்கள் இன்று அதிகாரத்திற்கு வந்த பின் அதே செயலை செய்வது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக கெசினோ மன்னரை இலங்கைக்கு அழைத்து வந்து இலங்கையில் கெசினோவை ஆரம்பித்து வைக்க அரசாங்கம் முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கரு ஜயசூரிய இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அப்ப எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யவேண்டியதைச்ச் செய்யலாமே சும்மா வெறும் கண்டனங்களைத்தெரிவிப்பதைத்தவிர்து எல்லோரும் ஒன்று சேர்ந்தால் ஒரு வளிபண்ணலாமே.
ReplyDelete