Header Ads



இலங்கை முஸ்லிம்கள் குறித்து இந்திய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்தியத் துாதுக் குழுவினரை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 10ம் திகதி இரவு 7.30 மணிக்கு சந்தித்து உரையாட உள்ளது. இச்சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட இருப்பதாக  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு மற்றும் இனவாதிகளினால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாட இருப்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.அதாவது, உலகில் 2வது பெரிய முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட நாடு இந்தியாவாகும்.

இந்நாடு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.