Header Ads



பள்ளிவாசல் சுவர்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் இனவாத வாசகஙகள் வரைவு


(Tn) பலஸ்தீனின் மேற்குக் கரையில் இருக்கும் இரு பள்ளிவாசல் சுவர்களில் இஸ்ரேல் சட்ட விரோத குடியிருப்பாளர்கள் இனவாத வாசகங்களை எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பெத்லஹமுக்கு அருகிலிருக்கும் இரு பள்ளிவாசல்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. துரு கிராமத்தில் இருக்கும் மிபால் பின் ராபா பள்ளிவாசல் சுவரில் எழுதப்பட்ட வாசகத்தில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பலஸ்தீனர்கள் கல்லெறிவதை நிறுத்தாவிட்டால் அதற்கான பதில் வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதே வாசகங்கள் அங்கிருக்கும் சவாஹுத்தன் அய்யூம் பள்ளிவாசலிலும் எழுதப்பட்டிருந்தது.

இதன்போது அருகிலிருந்த இரு கார் வண்டிகளின் சக்கரங்களுக்கும் யூதக் குடியிருப்பாளர்கள் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்த வந்த குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு வழங்கியதாக ஊர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.