Header Ads



தென் கொரியாவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை


தென் கொரியாவில் உள்ள வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வட கொரியா எச்சரித்துள்ளது.

யுத்தம் மூள்வதற்கான சாத்தியம் உள்ளதால், தென் கொரியாவிலுள்ள வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும், அதனால் அங்கிருந்து வெளியேறுமாறும் வட கொரியா அறிவித்துள்ளது.

இதேவேளை, தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் டிலான் பெரேராவிடம் வினவியபோது, அதுகுறித்து தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தென் கொரியாவிலுள்ள இலங்கைத் தூதுவருடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தென் கொரியாவில் யுத்தம் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு இலங்கையர்களை மாற்றுவதற்கும் தேவையேற்படின் அவர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதற்கான தேவை தற்போதில்லை எனவும் அமைச்சர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார். nf

No comments

Powered by Blogger.