Header Ads



தந்தை செலுத்திய முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவயதுச் சிறுமி மரணம்


(ஜே.எம்.ஹபீஸ்)

தந்தை செலுத்திய முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவயதுச் சிறுமி விபத்துக்குள்ளாகி கண்டி வைத்திய சாலையில் மரணித்த சம்பவம் ஒன்று பற்றித் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் கண்டி   ஹத்தரலியத்த பிரதேசத்தை சேர்ந்த அமாயா தெவ்மினி தென்னகோண் என்ற ஒருவயதுச் சிறுமியாகும் .

கட்டுகஸ்தோட்டை பேராதெனிய வீதியில் பயனித்த முச்சகக்ர வண்டி மரம் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அச் சமயம் பின் ஆசனத்தில் தனது பாட்டியின் மடியில் இருந்த  சிறுமி வெளியே தூக்கி வீசப்பட்டு கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டதாகப் பொலீஸார் தெரிவித்தனர். சிகிட்சைகள் பயனளிக்காத காரணத்தால் பின்னர் நேற்று (2013 04 08) இரவு உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

இம் மரணம் சம்பந்தமான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி திஸாநாயக்க நடாத்தி சாட்சியமளித்தார்.

No comments

Powered by Blogger.