எகிப்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் மோதல்
எகிப்தில் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள எஸ் குசுஸ் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது.
அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதில் 5 பேர் பலியாகினர்.
கலவரத்தின்போது முஸ்லிம்களின் வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. முஸ்லிம் மத நிறுவன சுவற்றில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிறுமிகள் படம் வரைந்ததே இந்த மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Post a Comment