Header Ads



தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லையாம்..!


(Sfm) வட மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தென்கொரியாவில் பணிப்புரியும் இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக ஊடக பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே  அவசர நிலைமைகள் எதுவும் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பணியகத்தினால் திட்டமிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்றைய தினம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக ஊடக பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.