Header Ads



ஏ.எச்.எம்.அஸ்வருக்கு 'உன் கதை முடியும்' என கொலை அச்சுறுத்தல்

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும் என  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இவர் மேற்படி தனக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகங்கக்ளுக்கு   தெரிவித்துள்ளார்.

இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள்  கல்முனை பிரதேசதிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்  எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. 

இதுகுறித்து நான் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கையடக்கத் தொலைபேசிக்கும் வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன” என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. நாடு உள்ள நிலைமைக்கு எந்த ஒரு முஸ்லிமும் அவ்வாறு அச்சுறுத்தல் கொடுத்திருக்கமாட்டான். இது நம்பிக்கை , அனுபவம் சார்ந்த விடயம்.
    வெளினாடுகளில் உள்ள புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்த இலங்கையின் உளவுத்துறைக்கு, ஆழும்கட்சியிலிருக்கும் ஓர் mp க்கு , அதுவும் ஆட்சியிலுள்ளவர்களை கடவுள் எனச்சொல்லும் இப்பக்தனுக்கு வந்த 1 , 2 அல்ல 19 கொலை அச்சுறுத்தலை கொடுத்த நபர்களை trace பண்ண முடியவில்லை என்றால் .... நகைப்பாய்த்தான் இருக்கிறது.
    ஆனால் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இதுவல்ல , முஸ்லிம்களை நோவினை செய்யும் நபர்கள் அண்மைக்காலத்தில் கிழக்கின் பக்கம் தம் பார்வையை திருப்பியிருப்பது யாரும் அறிந்த விடயம். 2 தினங்கழுக்கு முன் கிழக்கிலுள்ள தமிழர்களையும் சிங்களவர்களையும் முஸ்லிம்கழுக்கு எதிராய் ஒன்றுதிரட்டும் நிகழ்ச்சிகழும் தீவிரமடைந்த இன்நிலையில் . இவ் அரை சியல்வாதி விட்டிருக்கும் இத்தகவலையும் அவ்வாறுதான் நோக்கவேண்டியுள்ளது.
    முஸ்லிம்கள் மீது கைவைக்கும் திட்டத்தில் இத்தகவலானது இத்தூசியின் பங்கு.

    ReplyDelete
  2. என்ன பயம் வந்த்டுச்சா....?

    ReplyDelete
  3. para paran - v good.

    ippady oru sampavam nadanthalum parava illai pholum.

    ReplyDelete

Powered by Blogger.