இஸ்லாத்தில் பெண்கள் நிலை..!
(ஜ.எல்.எம். அஸ்வர்
இஸ்லாமிய சட்ட பீடம்
இஸ்லாமிய பல்கழைக்கழகம் - மதீனா)
இஸ்லாம் ஒரு பரிபுரண வாழ்க்கைத்திட்டம். மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான வழிகாட்டல்களையும் அது வழங்கியிருக்கின்றது.
இன்று உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், பெண்கள் சுதந்திரமாக வழிப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் மகத்துவம் பேணப்பட வேண்டும்,பெண்களுக்கு பாலியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அண்களுக்கும் பெண்களுக்குமிடையில் பால்நிலைத்துவம் பேணப்பட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்ப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இவர்களது பேண்ணுரிமைப்போராட்டம் வெறும் வெற்று கோஷங்களாகவும், இஸ்லாத்தை காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்வதாகவுமே அமைந்திருக்கின்றன. இவற்றின் மூலம் சிறந்த ஒரு தீர்வை எட்ட முடியாது என்பது யதார்த்த புர்வமான உண்மையாகும்.
பெண்ணின் பெருமையை நிலைநாட்டி, பெண்ணின் மகத்துவத்தை பேணிய ஓரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண்ணுரிமை பற்றி பேசியுள்ளது.
ஜாஹிலிய்யாக்காலத்தில் முற்று முழுதாக பெண்ணுரிமை மறுக்கப்பட்டு பெண்கள் போதைகளாகவும் பெண்கள் போதைகளாகவும், வெறும் சடப்பொருளாகவும், போகப் பொருளாகவும் கருதப்பட்டனர். பெண்குழந்தைகள் பிறந்தால் உயிருடன் புதைக்கப்பட்டனர். பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. இவ்வாறு பெண்ணடிமை சாசனம் எழுதப்பட்டு பெண்கள் மிருகங்களை விட கேவலமாக வழிநடத்தப்பட்டனர்.
“அவர்களில் ஒருவருக்குப் பெண் குழந்தை குறித்து நன்மாரயனம் கூறப்பட்டால் அவன் கோபத்தை விழுங்கியவனாக அவனது முகம் கறுப்பாகி விடுகிறது. அவனுக்கு கூறப்பட்ட நன்மாராயனம் தீங்கென்பன (தெனக் கருதிய)தனால் சமூகத்தை விட்டும் தலைமறைவாகிக் கொள்கின்றான். அவமானத்துடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா (என சிந்திக்கின்றான்) அறிந்து கொள்ளுங்கனள்! அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிக்க் கெட்டது. (அன்நஹ்ல் 58,59)
இந்த ஜாஹிலிய்ய கால சிந்தனையை இஸ்லாம் துகள் துகளாக்கி பெண்களுக்கான உரிமையை வழங்கியுள்ளது. அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும், அஸ்ஸீன்னாவிலும் பரவிக்காணப்படுகின்றன
“ஈமான் கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்க்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்காமான ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதாக அவர்கள் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்கை நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்க்க் கூடும்.” (அன்நிஸா 19)
ஒரு பெண்ணை பாதுகாத்தல், பராமரித்தல், செலவு செய்தல், அவளுக்குறிய சொத்துரிமையை வழங்குதல் அவளுடைய பாதுகாவலர் மீது கடமை என்பதே இஸ்லாத்தின் விதியாகும்.
தண்டனைக்குறிய விடயங்களில் கூட ஆணுக்கும், பெண்ணுக்கும் சமவுரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை பின்வரும் அல்குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.
“திருடனும் தருடியும் செய்த்தற்குக் கூலியாகவும், அல்லாஹ்வின் தண்டனையாகவும் அவ்விருவரின் கைகளில் நீங்கள் துண்டித்துவிடுங்கள் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்,ஞானமிக்கவன்.” (அல்மாயிதா 38)
இன்னும் இஸ்லாம் கல்வி கற்பதனை ஆண், பெண் இரு பாலாருக்கும் சரிசம்மாகவே விதியாக்கியுள்ளது. அதற்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.
“அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாகும்” (அல்ஹதீஸ்)
மேலும் அல்குர்ஆனில் கிட்டத்தட்ட பத்து அத்தியாயங்களிள் பெண்ணுரிமை, பெண்களுடன் தொடர்புடைய சகல அம்சங்களையும் அதளிவு படுத்துகிறது. அன்நிஸா, அத்தலாக் ஆகிய அத்தியாயங்களின் பெரும் பகுதி பெண்ணுரிமை பற்றியே பேசுகிறது. இன்னும் அல்பகரா, அல்மாயிதா, அன்நூர், அல்முஜாதலா, அல்மும்தஹினா, அத்தஹ்ரீம் போன்ற அத்தியாயங்கள் பெண்ணின் மகத்துவத்தை பரைசாற்றுகின்றன.
இஸ்லாம் ஒரு பெண்னை சடப்பொருளாக பார்க்காமல் முழு அறிவு சிந்தனை, தெளிவு உணர்ச்சியுள்ள உயிராக அடையாளப்படுத்துகிறது. உதாரணமாக ஸஹாபி பெண்மனிகளை பார்க்கின்ற போது அவர்களிடத்தில் வேகம், விவேகம், துணிவு, வீரம், அற்றல், ஆளுமை காணப்பட்டன. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஹதீஸ் கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ஸஹாபி பெண்மனிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.
மேலும் ஒரு ஆணை விட சில குறிப்பிட்ட விடயங்களில் இஸ்லாம் பெண்னை பொருப்புதாரியாக அடையாளப்படுத்தியுள்ளது. உதாரணமாக தனது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டையும் தனது கணவருடைய சொத்துக்களை பாதுகாத்தல் போன்றனவாகும்.
இஸ்லாம் மறுமை வாழ்க்கையில் கூட ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமைகளை வழங்குகின்றது. என பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது. “ இன்னும் ஆனாயினும் அல்லது பெண்ணாயினும் எவர் ஒண்மையாகவே விசுவாசங்கொண்டு நற்கருமங்களை சொய்வாராயின் அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள் அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டாரட்கள். (அன்னிஸா 124)
“உங்களில் ஆண் பெண் இருபாலாரிலும் எவர் நன்மை செய்த போதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன் ஏனென்றால் உங்களில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்த போதிலும் சலர் மற்ற சிலரில் உள்ளவர்கள்தான். ஆகவே கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை” (ஆல இம்ரான்195)
இவ்வாறே இஸ்லாம் ஆரம்பம் மதல் இறுதிவரை ஆண்ஈ பெண் இரு பாலாரையும் சரிநிகர்சம்மாய் மதித்து சம உரிமை வழங்கியுள்ளது. என கூறின் மிகையாகாது.

முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது.பணமும் பொருளும் தொலைக்காட்சியும் தான் கிப்லாவாக உள்ளது.ஒழுக்கம் என்ன விலை என்று கேட்குமளவிற்கு ஒழுக்கம் உள்ளது.கணவனை விட தொலைக்காட்சி தொடர்கள் முக்கியமாக உள்ளது
ReplyDeleteIF ALLTHE MALES AND FEMALE, BROTHERS AND SISTERS, FATHER AND MOTHER WERE DOING AS PER QURAN AND SUNNAH THAN WE DONT HAVE TALK ABOUT THIS HERE. FIRST LEARN THE READING OF QURAN WITH TRANSLATION TO BETTER UNDERSTAND OUR ROLE IN THE SOCIETY. INSHA ALLAH LETS TRY AND TAKE THE STEP TO LEARN THE QURAN. EVERY EQUIPMENT HAVE A MANUEL AND THE QURAN IS THE MANUAL FOR SOLUTIONS.
ReplyDelete