Header Ads



ஒஸ்மானியா கல்லூரியில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை



(பாறூக் சிகான்)

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி உயர்கல்வியை தொடரும் மாணவர் ஐவருக்கு புலமைப்பரிசில் வை.எம்.எம்.ஏ யினால் வழங்கி வைக்கப்பட்டன. நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக்கல்லூரி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம் முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.எஸ் றஹீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் போது தலா 1500 ரூபா என 5 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பேசும் ஆங்கிலப்பாடநெறியும் இந்நிகழ்வின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது ஆங்கிலப்பாடத்தின் அவசியம் குறித்து இ.சிடி  ஆங்கில கல்லூரியின் தலைவர் ஜே.றஜீவன் தெரிவித்ததார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான பி.ஏ. எஸ் சுபியான்,சரபுல் அனாம், யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மௌனத்தலைவர் நிலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.