'அமைதியற்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் சதிகளுக்கு மக்கள் துணைபோகக் கூடாது'
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைச் சீர்குழைத்து அமைதியற்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்க எடுக்கப்படும் சதி முயற்சிகளுக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் துணைபோகக் கூடாதென கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கில் வாழும் தமிழ்போசும் மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்து தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அவ்வப்போது விநியோகிக்கப்பட்டுவரும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இம்முன்னணி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கைகயில் மேற்படி கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பேரினவாதம் நாட்டில் தலைவிரித்தாடும் தற்போதய சூழ்நிலையில், இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையில் நிம்மதியினை இழக்கச் செய்வதற்கான முற்சிகளை தினம்தோரும் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களின் மத விடயங்களில் தடைகளை ஏற்படுத்தி வருவதுடன் பொருளாதாரத்தையும் சிதைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனார்.
இச்சக்திகளின் நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு மட்டங்களிலிருந்து எதிர்பலைகள் தற்போது எழுந்துள்ளன, சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பும் ஒரு சில நல்லுள்ளம்படைத்தோர் அவர்களின் பேரினவாத, விஷமத்தனமாக பிரச்சாரங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளனர். அடிப்படை மதவாதிகளினால் தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதொரு குழப்ப நிலைபோன்று கிழக்கிலும் அமைதியற்றதொரு சூழ்நிலையைத் தோறுவிக்க இச்சக்திகள் முற்பட்டுள்ளதேயே கிழக்கில் விநியோகிக்கப்படும் விருப்பத்தகாத துண்டுப்பிரசுரங்களையும் செயற்பாடுகளையும் கருத வேண்டியுள்ளது.
முயற்சிகளின் ஓரங்கமாக அடிக்கடி இரு சமூகங்களிடையேயும் விரிசலைத் தோற்றுவிக்கும் அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகினன.
கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக எவ்வித பிரச்சினைகளுமின்றி இரு சமூகங்களும் வாழுகின்றனர். இந்நிலையைச் சகித்துக்கொள்ளாத இப்பேரினவாத சக்திகள் சதித்திட்டங்களைத் தீட்டி மக்களின் நிம்மதியைச் சீர்குழைக்க முற்படுகின்றனர். இதனால் இவர்களின் வலையில் சிக்கிடாது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் -முஸ்லிம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதை நிதானமாக கையால்வது அவசியம். முஸ்லிம்களும் தமிழா்களும் ஒன்று சோ்ந்து சந்தேக நபா்கலின் செயல்களை உடனடியாக கன்கானிக்க வேண்டும். இந்த சதியின் பின்னால் உள்ள இனவாத தலைவா்களை எப்படியாவது ஆதாரபூா்வமாக கண்டுபிடித்து சட்டத்துக்குமுன்னால் கொன்டுவந்து தகுந்த தன்டனையை கொடுக்க வேண்டும்.
ReplyDeleteWhenever and wherever we seem to face a problem against our religion or among our ethnics, we have to consult with our religious leaders of that area first. I believe they will guide us proper way and not mislead us for their selfish is my humble comment.
ReplyDelete