Header Ads



95 ஆவது வயதில் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு


பாகிஸ்தானில், பள்ளி ஆசிரியர் ஒருவர், 95 வயதில் ஓய்வு பெற்று உள்ளார். பிரிட்டன் ராணுவத்தில் பணி புரிந்தவர் மேஜர் ஜாப்ரி. இரண்டாம் உலகப்போரின் போது, பாகிஸ்தான் வந்தார். பின், பாகிஸ்தானிலேயே நிரந்தரமாக தங்கிவிட்ட ஜாப்ரி, ராணுவத்தில்இருந்து ஓய்வு பெற்று, பள்ளி ஒன்றை துவங்கினார். 

அப்போது முதல், பள்ளி ஆசிரியராகவே பணியாற்றி வந்த ஜாப்ரி, தற்போது, 95 வயது நிறைவடைந்துள்ள நிலையில், பணி ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது ஓய்வு கிடைத்துள்ளதால், பிரிட்டன் சென்று, அங்குள்ள கல்லூரி மாணவர்களை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர், இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், ஜபருல்லா கான் உள்ளிட்டோர், ஜாப்ரியிடம் படித்தவர்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஜாப்ரியின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் பணி புரிய, உடலில் வலு இல்லாததாலேயே, ஓய்வு பெறுவதாகவும், சில நாட்களுக்கு பின், முடிந்தால் மீண்டும் ஆசிரியராக பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் ஜாப்ரி தெரிவித்து உள்ளார்.


No comments

Powered by Blogger.