ஆப்கானிஸ்தானில் இருவேறு தாக்குதல்கள் - 6 அமெரிக்கர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் இரு இடஙகளில் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் உயிரிழந்தனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாபூல் மாகாணத்தில் ஆளுநர் காருடன் சென்ற வாகனங்களை சர்வதேச கூட்டணிப்படையினரின் வாகனங்கள் தாண்டிச்சென்றபோது காரில் குண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்த தற்கொலைப்படையினர் வெடிக்கவைத்தனர். இந்த தாக்குதலில் 3 அமெரிக்க படைவீரர்கள், 2 அமெரிக்கர்கள், ஒரு டாக்டர் உயிரிழந்தனர்.
மற்றொரு தாக்குதல் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தது. இதில் ஒரு அமெரிக்கர் உயிரிழந்தார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
2014க்குள் கூட்டணிப்படை முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப்பணியை ஏற்க உள்ள அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கு அமெரிக்க படைகள் தரும் பயிற்சி போதுமானதா என்பதை மதிப்பிட அமெரிக்க முப்படை தளபதி மார்ட்டின் டெம்சி சனிக்கிழமை வந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

Post a Comment