Header Ads



சிரியா படையினர் 50 பேர் புரட்சியாளர்களுடன் இணைந்தனர்



சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக புரட்சிப்படைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போரிட்டு வருகின்றன. இதில் 75 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர புரட்சிப் படையினருக்கு ஆயுத உதவிகளை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து சமீபத்தில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பில் வலியுறுத்தியது. இந்நிலையில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் 50 பேர் புரட்சிப்படைகளுடன் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குவாமிஸ்லி நகரத்தில் இவர்கள் புரட்சிப்படையில் இணைந்ததாக  கூறப்படுகிறது. இணைந்தவர்களில் ஒருவர் இராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.