சிறைச்சாலைகளில் 50 க்கும் மேல் அரசியல்வாதிகள்
(Gtn) 50 க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை, ஊழல்மோசடி, கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐம்பது அரசியல்வாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்து அரசியல்வாதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஏனையவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டு காலப்பகுதியிலேயே அதிகளவான ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராகவே அதிகளவான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Post a Comment