ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல் - 10 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் நேட்டே விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஷிகால் மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களுக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு நேட்டோ விமானப்படை அழைக்கப்பட்டது.
விரைந்து வந்த நேட்டோ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 10 குழந்தைகள், 1 பெண் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர்.
படுகாயமடைந்த 6 பெண்கள் குனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஷிகால் மாவட்ட கவர்னர் அப்துல் ஜாகிர் தெரிவித்தார்.

Post a Comment