முஸ்லிம் தாயக கோட்பாடு எழுந்து வருகிறது - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை
சிங்கள பௌத்த மக்களுக்கான நன்றியை மறக்க வேண்டாம் என முஸ்லிம் சகோதர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு நடப்பதாக கூறும் பொய்யான இடையூறுகளை கண்டிப்பதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான முஸ்லிம் ஒத்துழைப்புக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கடையடைப்புக்கு பெருபான்மையான முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பது தெரிகிறது.
முஸ்லிம் அடிப்படைவாதியும் இனவாதியுமான முஜிபூர் ரஹ்மானின் கோரிக்கைக்கு அவருடன், கைகோர்த்து கொண்டவர்கள், கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு அடிப்பணிந்த சில நகரங்களில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரமே. காத்தான்குடி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் கடைகளை அடைத்து விட்டு, கடையடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
கொழும்பு மாளிகாவத்தையில் இருந்து கொண்டு சிங்கள விரோத, பௌத்த விரோத கடையடைப்புக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களும், அவர்களின் ஆதரவுடன் இயங்கும் அரசியல் குழுக்கமே ஆதரவு வழங்கியுள்ளனர்.
எவ்வித அடிப்படையுமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கடையடைப்பு போராட்டமானது முஸ்லிம் மக்கள் மத்தியில் தம்மை முஸ்லிம் நேசர்களாகவும் வீரர்களாக காட்டிக்கொள்வதற்கவுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது பௌத்த சிங்கள விரோதமாக மாறி வருகிறது.
தென்கிழக்கு பிரதேசம் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்குள் மூழ்கி வருகின்றது என்பதை ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்த பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் தாயக கோட்பாடு எழுந்து வருகிறது. விடுதலைப்புலிகள் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிய போதும் கொலை செய்த போதும் ஹர்த்தால்களை நடத்த ஆசாத் சாலி, முஜிபூர் ரஹ்மான் போன்ற காட்போட் வீரர்கள், அப்போது எங்கிருந்தனர் என்பதை சிங்கள மக்கள் அல்ல முஸ்லிம் மக்கள் அவர்களிடம் கேட்கவேண்டும்.
ரவூப் ஹக்கீம், பிரபாகரனுடன் உடன்படிக்கையை செய்து கொண்டு முஸ்லிம்களை காட்டி கொடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து பேசவும் இந்த காட்போர்ட் வீரர்கள் முன்வந்தார்களா?.
மணிராசகுளம் முஸ்லிம் கிராமத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றிய போது, ஹக்கீம், ஆசாத் சாலி, ரஹ்மான் போன்றவர்கள் எங்கிருந்தனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தை 2008 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், மீட்டபோது, அரசாங்கத்தை கவிழ்க்க ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளை தேசம் ஒருபோதும் மறக்காது என்பதை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு கூறிவைக்க விரும்புகிறோம் எனவும் வர்ணசிங்க மேலும் தெரிவித்துள்ளார். gtn

no one think about this death group Jathika Hela Urumay. let them say what ever they want.
ReplyDeleteGood joke for the year
ReplyDeleteBM.SABRY SEUSL
ReplyDeleteஅடிப்படைவாதத்தின் ஊற்றாய் இருந்து கொண்டு நாட்டில் இனவாத்தினையும் ஐக்கியமின்மையினையும் ஏற்படுத்துவது ஜாதிக ஹெல உறுமயதான் என்பதனை சம்பிக ரணவக்க புரிவாரோ என்னவோ நிச்சயம் நமது இலங்கை மக்கள் புரிவார்கள். நாட்டில் இனங்களுக்கிடையே சந்தேகங்களினையும் குரோதங்களினை தூண்டி வங்குரோத்து அரசியல் நடாத்துவது ஜாதிக ஹெல உறுமயதான். இனசௌஜன்யத்தினை ஏற்படுத்தி நாட்டில் அனைத்து மக்களினதும் மதவுரிமையினையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு அழுத்தம் சொடுக்கும் முஜிபுா் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி போன்றோரினை அடிப்படைவாதிகள் என்பது ஆதாரமற்ற மற்றும் அடிப்படையில்லாத பச்ச பொய்ங்க அமைச்சரே
Mr ranees , you are right, One more thing? Where was Mr. Nishantha during the same time ? I think he was an ettimba!
ReplyDeleteஹக்கீம் அவர்களே இதையெல்லாம் கேட்டுகொன்டும் அரசாங்கத்தில் இன்னும் இருந்தால் உங்களின் சந்ததி கூட உங்களை மதிக்காது.......
ReplyDeleteThe predictions of our Prophet will never fail. Not only Sri Lanka, the entire world come under one Islamic flag before end of this world during the re-coming of Jesus Christ (Eesa AWS). But it takes time. But, the way Jathika Hela Urumaya fear and act and Muslim's react to it shows that day may come soon. If it happen in our time, we every Sri Lankans will enjoy fair rule and peace!
ReplyDelete