கொழும்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய யுத்த கப்பலை பௌத்த தேரர்கள் பார்வை
(இ. அம்மார்)
ஈரான் இஸ்லாமிய குடியரசின் கடற்படைக்குச் சொந்தமான மத்திய கிழக்கின் மிகப் பெரிய யுத்தக்கப்பலான 'கார்க்' மற்றும் 'சபலான்' யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளன. இந்த கப்பலை பார்வையிடுவதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மத் நபி ஹஸனி பூர் அவர்களின் விசேட அழைப்பையேற்று ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் நெருங்கிய தொடர்புகளையுடைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களுடன் விசேட குழுவொன்று குறிப்பிட் பிரமாண்டமான யுத்த கப்பலை பார்வையிட்டது.
யுத்த கப்பல்களில் உள்ள அதி நவீன யுத்த உபகரணங்களை பார்வையிட்டதுடன் யுத்த கப்பல்களின் கொமாண்டர் அப்துல் வஹாப் தஹரி உட்;பட ஈரானிய கடற்படை அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இந்த போது பௌத்த சமய முக்கிய தேரர்களும் கலந்து கொண்டார்கள்.



ALHAMDHULILLAH
ReplyDeletemuslimkalin uthvieyum palathaiyum boutharkal maranthu vidak koodathu.
ReplyDelete