Header Ads



ஆக்கிரமிப்பு அமெரிக்க விமான தாக்குதல் - ஆப்கானிஸ்தான் நடிகர் மரணம்


ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகர் நாசர் முஹம்மது மஜ்னோன்யார் ஹெல்மாண்டி. இவர், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், தீவிர செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடும் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் வசிக்கும் தனது சகோதரியை சந்திப்பதற்காக கோஸ்காபி நகருக்கு ஹெல்மாண்டி நேற்று சென்றார்.  இந்த நகருக்கு அவர் திடீரென வந்ததால் அரசின் சார்பில் தங்களை உளவு பார்க்க வந்ததாக கருதியவாகள் அவரை கடத்திச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். 

இதற்கிடையில்,  போராளிகளின் ரகசிய பதுங்குமிடங்களை தாக்கி அழித்துவரும் நேட்டோ விமானப்படைக்கு இந்த புதிய பதுங்குமிடம் பற்றி ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்கு பாய்ந்து சென்ற நேட்டோ விமானங்கள் பதுங்குமிடத்தின் மீது குண்டு மழை பொழிந்தன. 

இந்த தாக்குதலில் ஹெல்மாண்டி மற்றும் 3 போராளிகள உடல் சிதறி பலியாகினர்.  நடிகர் நாசர் முஹம்மது மஜ்னோன்யார் ஹெல்மாண்டியின் பரிதாப முடிவு  ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.